பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 மிலயில், இவைகளை யெல்லாம் சமநிலைப்படுத்திக் கொண்டு போக வேண்டும். ஆனல் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், தனி மனிதனின் வளர்ச்சி யையோ, ஒரு கூ ட் ட த் தி ன் வளர்ச்சியையோ, வெளியே யிருந்து திணிக்க முடியாது என்பதே. மனி தன் ஒரு பூவைப் போலவோ, செடியைப் போலவோ வளர்கிறன், அப்படித்தான் வளர வேண்டும். அதை மேலே துக்கிவிட முடியாது; வேண்டுமானல் அதற்குத் தண்ணிர் ஊற்றலாம், அதன் வளர்ச்சிக்கு உதவி செய் பலாம்; அதற்கு நல்ல நிலமளிக்கலாம்; அதைவெளியே காற்றுப் படும்படியோ, வெய்யில் படும்படியோ வைக் கலாம். ஆல்ை அது தானகவே வளர வேண்டி யிருக் கிறது; பலாத்காரமாக அதை காம் வளரச் செய்ய முடி யாது. நம் மக்களில் பலர் நாம் மேலேயிருந்துகொண்டு போடுகிற உத்தரவில்ை வளர்ச்சியை உண்டாக்க முடி யும் என்று கருதுகின்றனர், அது இயலாத காரியம். -புதுடில்லியில் பாசனம், மின்சார மத்திய போர்டுக் கூட்டத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு, 17-11-52. 事 辜 事 90 0–5