பக்கம்:புதையலும் பேழையும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

5

8

புதையலும்

உவமையால் உணரல்.

ஒரு பொருளின் தொழில், பயன், வடிவம், நிறம் ஆகிய வற்றை விளக்கமாகக் காட்ட, ஒத்த மற்றொரு பொருத்தமான பொருளை உவமையாகக் கூறுதல் மரபு. உவமை காட்டுவது செய்யுள் அழகுக்கு மட்டுமன்று; உவமிக்கப்படும் பொருளின் உள் தன்மை, உயர்வு, சிறப்பு, விளைவு முதலியவற்றின் விரிவு களையெல்லாம் வெளிப்படுத்திக் காட்டவே உவமை பயன்படும். உவமையாகக் கூறப்படும் பொருளின் தன்மைகள் எல்லாம் உவமிக் கப்படும் பொருளிலும் பொருத்திக் காணவேண்டும் என்பதன்று. காணுவதற்கு இடம் இருப்பின் இடம்கொடுக்கும் வழியெல்லாம் காணுவதே சிறப்பு.

பவளம் போன்ற இதழ் என்றால், பவளத்தின் செம்மை நிறம் மட்டில் இதழுக்குப் பொருந்தும். முள்முருக்கை மலர்போன்ற இதழ் என்றால் அம்மலரின் செம்மை நிறமும், மென்மையும் பொருந் தும். கொவ்வைக் கனி போன்ற இதழ் என்றால் அக்கணியின் செம்மை நிறமும், மென்மையும், வடிவும், திரட்சியும், உள்நரம்பு ஒட்டமும் பொருந்தும். மேலும், பொருத்தம் காண எண்ணி இதழைப் பிளந்து விதை இருக்குமோ எனக் காணுவதோ?

எனவே, உவமையில் உற்ற தன்மைகளை விரிவாக உணர்ந்து அத்தன்மைகள் எவ்வளவில்வமிக்கப்படும் பொருளுக் கும் உற்றனவாக ஒத்து வருகின்றனவோ அவ்வளவில் பொரு ளின் சிறப்பு இயல்புகளை உணரலாம். இதற்குத் தொல்காப்பியம்

"உவமைப் பொருளின் உற்ற துணரும் தெளிமருங் கிலவே திறத்திய லான' '

- என இடம் வகுக்கின்றது. இதனை விளக்கும் பேராசிரியர் என்றும் உரையாசிரியர்,

"உவமை கூறுவோர் உவமையில் பகுதி பலவும் உணராமற் சொல்லியவழியும் அஃது உணரவரும் என்பது கருத்து’ - என்று உரை வகுத்தார். எனவே, விரிவாக உணர விரும்புவோர் உவமை கூறியவர் கருதிக் கூறாத கருத்துகளும் பொருந்தி வருமானால் கொள்ளலாம். அவ்வழியில் இங்கு அத்திமர உவமையைக் காணலாம் :

1 தொல் பொருள் : 291