பக்கம்:புதையலும் பேழையும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

தது மார்பின் காம்புப் பகுதியேயாகும். (இது எனது முடிச்சுவிழ்கும் சொல்’ என்னும் கட்டுரை யில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது)

4. சிலையமைப்பு, தெய்வப் படிமமே யாயினும் தெய்வ வடிவக் குறிகளுடன் மாந்தர் வடிவக் குறிகளும் தென்படுகின்றன.

5. கல்லின் நிறம் வெளிரிய மஞ்சள் நிறமாகத்

தோற்றமளிப்பது கந்தகக் கலப்புடைய இமயக் கல்லின் தன்மையைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. -

இவ்வைந்து சான்றுகளுடன் முன்னே காட்டப்பட்ட ஆறு சான்றுகளையும் பிற சின்னங்களையும் தடயங்களையும் இயைத்து நோக்குங்கால் சுருளிமலை மங்கலதேவிக் கோட்டத்தில் காணப் பட்டுள்ள கண்ணகியார் சிலையே சேரன் செங்குட்டுவன் வடித்த சிலை என்று கொள்ளும் உறுதி நிலைக்கின்றது. இதன் தொடர்பில் 'குட்டுவன் எடுத்த கோட்டம் சுருளிமலை என்று இப்போது வழங்கப்படும் கம்பம் பள்ளத்தாக்கை அடுத்த நெடு வேள் குன்றத்தின் மீதுள்ளதுதான் என்ற உறுதியும் நிலைக் கின்றது.

இறுதி முத்திரை.

இவ்வுறுதிக்கும் ஒரு முத்திரை குத்த இறுதியானதும், வேறு எவ்வகை மறுப்பும் கூற இயலாமற் போவதுமான ஆய்வு ஒன்று உண்டு. கருத்து மாறுபாடு எழுந்துள்ள இரண்டு சிலைக் கற்களினின்றும் ஒவ்வொரு சில்லளவு கல் துண்டை எடுத்து ஆய் வதே அது. இக்கால அறிவியலின் துணைகொண்டு எக்கல் இமயக்கல் எனக் கண்டு விடலாம். அவ்வாறு காண்பது முடிந்த முடிபான முத்திரை ஆகும்.