பக்கம்:புதையலும் பேழையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 75

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்னும் ஒரு சதய விழா நிகழ்ந்தது. х

அது தஞ்சையில் அன்று; தொண்டியில் நிகழ்ந்தது. சோழனுக்கு அன்று; சேரனுக்கு நிகழ்ந்தது. இராசராசனுக்கு அன்று; சேரமான் கோக்கோதை

- மார்பனுக்கு நிகழ்ந்தது.

சேரமான் கோக்கோதை மார்பன் பிறந்த நாள் சதய நாள். அந்நாளில் அவன் வெள்ளணி அணிந்தான். அமைதியின் சின்னமாக அதனைக்கொண்டான் அவனது முரசு முழங்கிப் பின்வருமாறு குரல் கொடுத்ததாம்:

மன்னர் காள்! இன்று குதிரை பூட்டிய தேரைக்கொண்ட கோதைமார்பன் பிறந்த நாள். ஆம், அவன் பிறந்த சதயத் திருநாள். இன்று நீர் பாதுகாப்பு நிறைந்தவர் ஆனிர். அச்சத்தால் அடைத்திருந்த கோட்டையைத் திறப்பீர். நடுக்கத்தால் தழுவாதிருந்த மகளிரைத் தழுவி இன்பத்தைச் சுவைப்பீர். கவலையின்றிக் கண்ணுறங்குவீர்.

இம்முரசை நான்கு அடிகளால் முழக்கும் பாடல்:

'ஏமாரு மன்னிர் எயில் திறமின்; எங்கோமான்

வாமான்தேர்க் கோதை சதயநாள்-ஆமாறு

காமம் நுகருமின் கண்படுமின்; என்னுமே

ஏம முரசின் குரல்.”

இவற்றால் பிறந்த நாள் விழா தமிழ் மண்ணில் முளைத் ததை உணர்கின்றோம். அது நாடு தழுவிய விழாவாகத் தழைத் தது. ஊர்த்திருவிழாவாகவும் இல்ல நல்விழாவாகவும் திகழ்ந்தது.

காலத்தில் நேர்ந்த இடை வெட்டுகளால் அவைகள் தேய்ந்தன; ஒய்ந்தன.