பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 161. திண்ணையில் ஏறி நான் படுத்திருந்த இடத்துக்கு வந்து, விளக்கைக் காட்ட, கட்டாரித்தேவன் மெதுவாக வந்து எனக்குப் பக்கத்தில் நின்று என்னுடைய முகத்தை உற்று நோக்கினான். நான்துங்குவதாகப் பாசாங்கு செய்ய எவ்வளவோ சிரமப்பட்டு முயன்றேன். ஆனாலும், என் முகத்தில் ஒருவித சலனம் உண்டாவதாக எனக்கே தெரிந்தது. என்னை உற்றுப் பார்த்த கட்டாரித்தேவன் உடனே திடுக்கிட்டு ஆச்சரியம் அடைந்தவனாய், அடேய் கந்தா! நீ கூட இப்படி ஏமாறிப் போனாயே! இவன் தஞ்சாவூரில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரல்லவா! இவனிடத்தில் நம்முடைய ரகசியங்களை எல்லாம் சொல்லி விட்டாயே! என்றான். அதைக் கேட்டு திடுக்கிட்டு நடுங்கி, "என்ன ஆச்சரியம் இவன் பேரீச்சம்பழம் விற்றுக்கொண்டு வந்தான். பேசியதும் பட்டிக்காட்டான் போலவே இருந்தது. அதைக் கண்டு அல்லவா நான் ஏமாறிப் போனேன்' என்று அவன் சொல்லி வாய்மூடு முன் கட்டாரித்தேவன் புலிபோல ஒரே பாய்ச்சலாக என்மேல் பாய்ந்து என்னுடைய குரவளையைப் பிடித்து அழுத்திக்கொண்டு நான்கூச்சலிடமுடியாமல் செய்துவிட்டான். இருந்தாலும் நான் மூச்சுவிட மாட்டாமல் தத்தளித்து, அவனுடைய இரும்புப் பிடியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அந்த முரட்டு விலங்கின் இடத்தில் என்னுடைய முயற்சி ஒன்றும் பலிக்கவே இல்லை. ஆகவே, நான் திமிறாமல் சும்மா இருந்தால், அவன் அதிக உபத்திரவம் செய்யாமல் இருப்பான் என்ற நினைவோடு நான் திமிறாமல் சும்மா இருந்தேன். எப்படியும் அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்ற எண்ணமே என் மனசில் உண்டாயிற்று. நான் முற்றிலும் ஜெயமடைந்து விட்டதாக நினைத்திருந்த சமயத்தில் எதிர்பாராதபடி கட்டாரித்தேவன் வந்து என்னைக் கண்டு கொண்டதும், நான் தப்ப வகையின்றி அவனிடம் அகப்பட்டுக்கொண்டதும் என் மனதில் சொல்ல முடியாத திகிலையும் கலவரத்தையும்