பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 167 இப்படிப்பட்ட தந்திரம் செய்யும்படி அனுப்பியிருக்கிறான். ஜெமீந்தார்:- சரி; அதிருக்கட்டும்; நீர் இப்போ அந்தக் கட்டாரித்தேவன்மேல் ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொள்ளப் போகிறீரோ? இன்ஸ்பெக்டர்:- இல்லை இல்லை. இது சம்பந்தமாக நான் இப்போது அவர்கள் பேரில் நடவடிக்கை எடுத்துக் கொண்டால், தங்களுடைய பெயரையும் இளவரசருடைய பெயரையும் நான் வெளியிட வேண்டியிருக்கும். ஆகையால், நான் இது சம்பந்தமாக அவர்களைப் பிடிக்கப் போகிறதில்லை. இன்றைய தினம் ராத்திரி அவர்கள் அன்னத்தம்மாளுடைய வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க எண்ணியிருக்கிறதைப் பற்றி கந்தன் என்னிடம் சொன்னான் அல்லவா! ஆகையால், நான் தக்க ஏற்பாடுகளுடன் இன்றையதினம் ராத்திரி அம்மன்பேட்டைக் குப் போய், கட்டாரித்தேவனையும் அவனுடைய கூட்டத்தாரை யும் பிடித்துவிடத் தீர்மானித்து இருக்கிறேன்.அதற்காக நான் அவசரமாகச் சில இடங்களுக்குப் போக வேண்டும். அதற்கு முன் உங்களிடம் வந்து ரகசியத்தை வெளியிட்டுப்போக எண்ணி வந்தேன். ஜெமீந்தார்:- சரி; நீர் சொல்வது சரியான யோசனைதான்; அப்படியே செய்யும். ஆனால், அவர்கள் இளவரசரிடத்தில் எழுதி வாங்கிய தஸ்தாவேஜு இன்னது என்று கண்டுபிடிக்கக் கூட இல்லையே. இன்ஸ்பெக்டர்:- எனக்கு இன்னம் சில தினங்கள் வரையில் அவகாசம் கொடுத்தால் அதையும் நான் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். - ஜெமீந்தார்:- இருக்கட்டும். அப்படியே செய்யும். அதோடு என்னுடைய தினசரி டைரிப் புஸ்தகம் என்னிடம் எப்படித் திரும்பி வந்தது என்பதையும் நீர் கண்டுபிடித்துச் சொல்லும்.