பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பூர்ணசந்திரோதயம் - 5 இதை நீர்சிறையாக மதித்தாலும் சரி; வேறு எப்படி மதித்தாலும் சரி, அதைப்பற்றி நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை.

கலியாண:- சரி; அப்படியே ஆகட்டும். நீங்கள் தஞ்சாவூரில் என்னிடம் கடிதம் கொடுத்தபிறகாவது என்னைச்சுயேச்சையாக விட்டு விடுவீர்களோ, அல்லது அதற்குமேலும் ஏதாவது நிர்பந்தம் செய்வீர்களோ? -

பஞ்சண்ணா:- வண்டி அந்த ஊருக்குள் நுழையும் இடத்தில் உம்மிடம் கடிதத்தைக் கொடுத்து உம்மைக் கீழே இறக்கிவிட்டு நாங்கள் அவரிடம் போய் அதை அறிவித்து விடவேண்டும். அவ்வளவே நாங்கள் செய்யவேண்டியது. அதன்பிறகு நீர் உம்முடைய பிரியப்படி செய்யலாம் என்பது சுலபமாக

விளங்கவில்லையா?.

அவனது அழுத்தமான சொற்களைக் கேட்ட கலியாண சுந்தரம் அதற்குமேல் தான் அந்த மனிதனிடம் அநாவசியமாக வார்த்தையாடிக் கேட்டுக்கொள்வதில் எவ்விதப் பலனும் ஏற்படாதென்று நிச்சயித்துக் கொண்டவனாய், அவ்வளவோடு ஒய்ந்து மெளனம் சாதித்தான். வண்டி முன்போல வாயுவேக மனோவேகமாகப் பறந்து சென்று கொண்டிருந்தது. குதிரைகள் சிறிதும் சோர்வடையாமல் ஒரே மாதிரியான விசையோடு சென்று கொண்டிருந்தன. பொழுதும் கழிந்துகொண்டே இருந்தது. ஆகையால், இரவு ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணி ஆகிவிட்டது. அப்போதும் பஞ்சண்ண ராவும் தூங்கவில்லை; கலியாண சுந்தரமும் தூங்கிவில்லை. அவனது மனதில் பலவிதமான புதிய எண்ணங்களும் சந்தேகங்களும் தோன்றி அவனை வதைக்கத் தொடங்கின. ஆகையால், அவன் தூக்கம் பிடியாமல் அப்படியே சாய்ந்தபடி கண்களை மூடிக்கொண்டு சிந்தனைக் கடலில் மூழ்கியிருந்தான். அவ்வாறு மூடு மந்திரமாகத் தன்னை விடுவிக்கும் மனிதர் யாராக இருக்கலாமென்ற சந்தேகமே எழுந்தெழுந்து அவனது மனதை உலப்பிக் கொண்டிருந்தது. ஷண்முகவடிவு அப்போது எங்கே