பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 187

அதைக் கேட்ட நீலமேகம் பிள்ளையின் துயரம் ஆயிரம்

மடங்கு பெருகியது. அவர் இன்ஸ்பெக்டரை நோக்கி,

“ஐயா! நீங்கள் சொல்வதைக்கேட்க, என் மனம் முன்னிலும்

அதிகமாய்ப் பதறித்துடிக்கிறது. அவர்கள் இருவரும் இப்போது

எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டு

மென்ற ஆவல் என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறது.

இந்த விஷயத்தில் நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய

வேண்டும்’ என்று நயந்து நிரம்பவும் உருக்கமாகக் கூறினார்.

இன்ஸ்பெக்டர், ‘ஐயா அம்மணிபாயி என்ற அந்தப்பெண் பிள்ளை பெருத்த சூதுகாரி. அவள் சக்காநாயக்கர் தெருவில் 13வது இலக்கமுள்ள வீட்டிலே இருக்கிறாள். ஷண்முகவடிவு இந்த ஊருக்குப் புதியவள். ஆகையால், அவளை ஏமாற்றி அந்த விலாசமுள்ள வீடு வேறே இடத்தில் இருக்கிறதென்று சொல்லி அழைத்துக் கொண்டுபோய் மருங்காபுரி ஜெமீந்தார் மாளிகை யில் விட்டுவிட்டாள். அந்த ஜெமீந்தார் வயசில் கிழவரானாலும் ஸ்திரீசபலம் அதிகமாக உடையவர். ஷண்முக வடிவின் வாயிலிருந்தே அவளது வரலாற்றைக் கேட்டுக் கொண்டு, மருங்காபுரி ஜெமீந்தார்தான் சோமசுந்தரம் பிள்ளையென்று சொல்லி ஷண்முகவடிவை ஏமாற்றி துன்மார்க்கமான நோக்கத் தோடு அவரிடம் கொண்டுபோய் விட் டு வந்து விட்டாளாம். அவள் பேசிய பேச்சுகளிலிருந்து, கமலத்திட மிருந்து அவர்களுடைய குடும்ப விஷயங்களை ஏற்கெனவே அவள் தெரிந்துகொண்டிருக்கிறாள் என்பது நன்றாகத் தெரிந்தது. அந்த அம்மணிபாயி இவர்களுடைய குடும்ப வரலாறு முழுவதையும் மருங்காபுரி ஜெமீந்தாரிடத் திலும் வெளியிட்டி ருக்கிறாள் என்பது நன்றாகத் தெரிகிறது. அவர் அந்த வரலாறுகளை உபயோகப்படுத்தி தாமே சோமசுந்தரம்பிள்ளை என்று நடித்தாராம். இவைகளை எல்லாம் கவனித்தால், கமலம் என்னும் மூத்த பெண்ணும் இந்த அம் மணிபாயின் இடத்திலேயே அகப்பட்டுக்கொண்டு எங்கேயோ வைக்கப்