பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 221 கிறீர்களா? இதிலிருந்து நான் அவர்களுக்குப் பரிந்து பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணிவிடவேண்டாம். அவர்களுடைய உண்மையான குணம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு நான் இப்படிக் கேட்கி றேன்’ என்றான். அந்த வீட்டுக்காரன், ‘நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அவர்களை நீங்கள் நன்றாக அறிந்து கொள்ளாத வர்கள் போலிருக்கிறதே. ஒருவேளை புதிதாக நீங்கள் அவர்களிடம் சிநேகம் செய்துகொள்ள வந்தவர்கள் போலிருக் கிறது. நீங்கள் நேரில் பழகி அவர்களுடைய குணம் எப்படிப் பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன். அவர்களோடு முதலில் நாங்கள் பழகியிருந்தால் அல்லவா, அவர்களுடைய குணம் இப்படிப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியப் போகிறது. அவர்களுடைய குணம் எப்படிப்பட்டது என்பது, அவர்களுடைய சிநேகத்தை நாடுவோருக்கே அவசியம் தெரியவேண்டும். எங்களைப் போன்ற குடும்பஸ்தர் களுக்கு அது தெரியவேண்டிய அவசியமே இல்லை” என்றான்.

கலியாணசுந்தரம், முன்னிலும் அதிக கலக்கமும் ஆச்சரியமும் அடைந்து, சொல்வதைப் பார்த்தால் அவர்கள் குடும்பஸ்தர் அல்லவென்று சொல்வதுபோல இருக்கிறதே’ என்றான். வீட்டுக்காரன் புரளியாகப் பேசத் தொடங்கி, ‘ஆம் எல்லோரும் குடும்பஸ்தர் கள்தான். ஒருவீடு வைத்துத் தனியாக காலrேபம் செய்பவர்கள் எல்லோரும் குடும்பஸ்தர்கள்தான். இருந்தாலும் புருஷன் பெண் ஜாதியென்று ஒரு நிர்ணயமாக இருக்கிறவர்களுக்கும் தாசிகளுக்கும் வித்தியாசமில்லையா?” என்றான்.

  • {

நீங்கள் குடும் பஸ்தர் என்று

கலியாணசுந்தரம் முன்னிலும் அதிக பிரமிப்பும் குழப்பமும் அடைந்து, “என்ன நீங்கள் இப்படிப் பேசுகிறீர்களே அப்படி யானால், பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் தாசிகளென்று நீங்கள் சொல்வதுபோல இருக்கிறதே!’ என்றான்.