பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பூர்ணசந்திரோதயம் -5 வீட்டுக்காரன் ஒருவாறு ஆத்திரமடைந்து, ‘அவர்கள் தாசிகளென்று நானாகச் சொல்லவில்லை; இந்த ஊர் முழுதும் சொல்லும் சங்கதியை நான் சொல்லுகிறேன். அதுவுமன்றி, அவர்களுடைய நடத்தையே அப்படிச் சொல்லுகிறது. அதை நான் சொல்லவேண்டியதில்லையே! ஆனால், இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்றவர்கள் சாதாரண மனிதரிடம் பழக்கம் வைத்துக்கொள்ளும் சாதாரண தாசிகள். இவர்கள் அரண்மனையைச் சேர்ந்த பெரிய மனிதர்களை அடுத்துள்ள தாசிகள். அதுவொன்றுதான் வித்தியாசம். ஆனாலும் தொழில் மாத்திரம் ஒரே விதமானதுதான்’ என்றான்.

அதைக்கேட்ட கலியாணசுந்தரத்தின்தேகம் பதறியது. மனம் கொதித்தது. கண்கள் கோபத்தினால் சிவந்தன. தான் உடனே அவ்விடத்தை விட்டுப் போய் விடலாமாவென்று அவன் நினைத்தான். ஆனாலும், அவனை மீறி வார்த்தைகள் அவனது வாயிலிருந்து வெளிப்பட்டன. அவன், ‘ஐயா! நீர் பேசுவது கொஞ்சமும் சரியாக இல்லை. பக்கத்து வீட்டிலிருக்கும் மனிதர் நிரம்பவும் கண்ணியம் வாய்ந்த பெரிய மனிதர். நான் அவரைப் பற்றி நன்றாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைச் சேர்ந்த மனிதர்களைத் தாசிகளென்று நீர் சொல்லுகிறீரே!” என்றான்.

வீட்டுக்காரன் வியப் புற்று, ‘அந்த வீட்டில் எனக்குத் தெரியாமல் எந்தப் பெரிய மனிதர் ஐயா இருக்கிறார்? அரண்மனையைச் சேர்ந்த சில தாசிகளல்லவா அதில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் கண்ணியம் வாய்ந்த பெரிய மனிதரென்று உம்மைத் தவிர வேறே யாரும் சொல்ல நான் கேட்டதில்லை’ என்றான்.

கலியாணசுந்தரம் திடுக்கிட்டு முற்றிலும் பிரமிப்பு அடைந்து, ‘யார் யார் அரண்மனையைச் சேர்ந்ததாசிகளா பக்கத்து விட்டில் இருக்கிறார்கள் எப்போது முதல் அவர்கள் இருக்கிறார்கள்?” என்றான்.