பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 227 போய் அந்த வதந்தி உண்மையானதுதானா என்பதைச் சந்தேகமற நிச்சயித்துக் கொண்டு வந்தாராம். இந்தச் சமயத்தில்

தார்வார்தேசத்திலிருந்து இந்த இளவரசருக்குச் சொந்தமான ஒரு

பெண் விருந்தாளியாக இந்த ஊர் அரண்மனையில் வந்திருந்

தாளாம். அவள் அற்புதமான சுந்தரமும், ஆச்சரியகரமான கல்வியறிவும், நுட்பமானபுத்தியும், அருமையான குணங்களும்

வாய்ந்தவளாக இருப்பதைக் கண்டு இளவரசர் அந்தப்

பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு பட்டமகிஷியை

விலக்கி, அந்த ஸ்தானத்தில் புதிய ராணியை வைத்து

விடுவதென்று தீர்மானித்திருக்கிறாராம். அந்தக் கலியாணம்

இன்றைய தினம் நடக்கிறதென்று ஜனங்கள் சொல்லிக்

கொண்டு, வேடிக்கை பார்க்கவும் பந்தி போஜனத்துக்காகவும்

எல்லோரும் கும்பல் கும்பலாகப் போகிறார்கள். இந்நேரம்

அந்தக் கலியாணம் நடந்து கொண்டிருக்குமென்று நினைக்

கிறேன்; அதற்காகவே பக்கத்து வீட்டுக்காரியும் போயிருப்பாள்.

இவர்களுக்கெல்லாம் ஏழெட்டு தினங்களுக்குப் பலத்த

வேட்டைதான். அநேகமாய் இவள் அரண்மனையிலிருந்து

திரும்பி வீட்டுக்கு வர, இன்னம் ஒரு வாரமாவது செல்லு

மென்று நினைக்கிறேன்’ என்றான்.

அந்த வரலாற்றைக் கேட்ட கலியாணசுந்தரம் அளவற்ற கலக்கமும் பதைப்பும் அடைந்தான். கமலத்தைப் பற்றிய நினைவெல்லாம் அவனது கவனத்தைவிட்டுச் சிறிது அப்பால் விலகியது. இளவரசரது கலியாணத்தைப் பற்றிய எண்ணமே அவனது முழு மனதையும் கவர்ந்துகொண்டது. தான் இனி அந்த மனிதரிடம் அதிகமாகப் பேச்சு வளர்ப்பது அவருக்குத் துன்பமாக இருக்குமென்று நினைத்த கலியாணசுந்தரம் தான் போவதாகச் சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு அவ்விடத்தைவிட்டு வெளிப்பட்டான்.

வெளிப்பட்டு வீதியை அடைந்தவன்தான் அப்போது என்ன செய்வது என்பதையாவது, எங்கே செல்வது என்பதையாவது