பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 283 அவ்வாறு அவர் நிரம் பவும் பலமான குரலில் எல்லா ஜனங்களுக்கும் கேட்கும்படி மொழிந்தார் ஆதலால், அந்த விபரீதச் செய்தியைக் கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் திடுக் கிட்டு பிரமித்து ஆச்சரிய வசத்தராய் அப்படியே அசைவற்று ஸ்தம்பித்துப் போயினர். இளவரசருக்கு அதுவரையில் யாதொரு சந்ததியும் இல்லையென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாதலால், நீலமேகம்பிள்ளை கூறியது சொப்பனம் போலவும், கட்டுக்கதை போலவும் தோன்றியது. மற்றவரைப் போல இளவரசரும் திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தார். நீலமேகம்பிள்ளையின் தாயைத் தாம் வஞ்சித்ததன் பலனாக அவளது வயிற்றில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததென்ற ஞாபகம் அப்போது அவருக்கு உண்டாகவில்லை. ஏனெனில், அந்தப் பெண்கள் சிறு குழந்தைகளாக இருக்கையிலேயே ரகசியமாகத் திருவாரூருக்கு அனுப்பப்பட்டுப் போயினர். ஆதலால், நெடுங்காலமாக அவர் இராமலிங்கம் பிள்ளையின் மாளிகைக்குப் போகவில்லை, ஆதலால், அவரது குடும்ப வரலாறு எதுவும் இளவரசருக்குத் தெரியாமலே போனது. ஆகையால், அந்தக் குழந்தைகளைப் பற்றிய நினைப்பே இளவரசர் மறந்துவிட்டார். அவர்களைத் தவிர, எவ்விடத்திலும் அவருக்கு வேறு குழந்தைகளே பிறக்க வில்லை. ஆதலால், நீலமேகம்பிள்ளை கூறியது அவருக்கும் புதுமையாகவும் அசம்பாவிதமாகவும் தோன்றியது.

உடனே இளவரசர் நீலமேகம்பிள்ளையைப் பார்த்து, “ஐயா! நீலமேகம்பிள்ளை இப்போது வந்துவிட்டுப் போனவர் சொன்ன விஷயமாவது கொஞ்சம் பொருத்தமும் அர்த்தமும் உடையதாக இருந்தது. நீர் சொல்லும் விஷயம் முற்றிலும் புதுமையாகவும் அசம்பாவிதமாகவும் இருக்கிறது. எனக்குச் சொந்தக் குழந்தைகள் இல்லை என்பது இந்த உலகத்துக்கே தெரிந்த விஷயம். எங்களுக்கெல்லாம் தெரியாதபடி நீர் எனக்கு இவ்வளவு பெரிய மகளைச்சம்பாதித்துக் கொடுக்க முன்வந்தது