பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 309 கொள்வார்கள் என்று எண்ணி, தாங்கள் கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழைந்தேன்’ என்றார்.”

அதைக்கேட்ட இளவரசர்திடுக்கிட்டு, “ஹா ஷண்முகவடிவு உங்களுடைய வீட்டிலா இருக்கிறாள்! இதுவும் தெய்வானுகூலந் தான். அவள் வேறே எவ்விடத்திற்குப் போனாலும், மனிதர் அவளிடம் துர்மோகம் கொள்வர். உம்மிடம் தெய்வலோகத்து அப்ஸ் ஸ்திரீயை விட்டு வைத்தாலும் கொஞ்சமும்

பயமில்லை’ என்றார்.

அவர்களது சம்பாஷணையைக்கேட்ட கமலமும், நீலமேகம் பிள்ளையும் சகிக்க இயலாத அபாரமான மகிழ்ச்சியும் குதுகலமும், மனவெழுச்சியும் முகமலர்ச்சியும் அடைந்து, ‘ஹா! அப்படியா அவள் இப்போது இங்கேயே வருவாளா?” என்று மிகுந்த வியப்போடு கூறினர். அதே காலத்தில் இளவரசர் முன்பக்கத்து வாசற்கதவை மறுபடியும் மூடிவிட்டு, ரrாமிர்தம் ஜெமீந்தாரையும் அழைத்துக்கொண்டு கமலம், நீலமேகம் பிள்ளை ஆகிய இருவரும் இருந்த இடத்தை அடைந்து தமது ஆசனத்தில் அமர்ந்தார். அதே rணத்தில் அந்த அறையின் பக்கத்துக் கதவு திறந்துகொண்டது; உடனே ‘அக்கா கமலம்!” என்று ஒர் இனிய குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து அற்புதமான ஒரு ஜோதி தோன்றுவதுபோல, திவ்ய தேஜோ மயமான அலங்காரத்தோடு இருந்த ஷண்முகவடிவும் விரைவாக உள்ளே நுழைந்து மற்றவர் இருப்பதையும் மறந்து பரவசமடைந்து கமலத்தை நோக்கி ஓடிவர, அவளைக் கண்ட கமலமும் அதுபோலவே, சகிக்க வொண்ணாத ஆவலும் வாஞ்சையும் உருக்கமும் கொண்டவளாய் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து தனது அருங்குணத் தங்கையை அணுக, இருவரும் தாயைப் பிரிந்து கூடிய கன்றுபோல ஒருவரையெ வர் ஆவலோடு கட்டித் தழுவ, இருவரது கண்களிலிருந்தும் ஆனந்த பாஷ்யமும் மாலைமாலையாகப் பெருகி வழிந்தது. இருவரும் தமது துக்கப் பெருக்கையும் சந்தோஷ எழுச்சியை