பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் -- 31 சுருக்கமாக இருந்தது. ஆனாலும் மிக்க உருக்கமாக இருந்தது. அதைப் படித்த உடனே என் மனம் கலங்கி உருகிப் போய்விட்டது. அவளது விஷயத்தில் அளவற்ற பச்சாதாபமும் இரக்கமும் தோன்றி வதைக்க ஆரம்பித்தன. அவள் இயற்கையிலேயே நற்குணங்களும், மன உறுதியும் வாய்ந்தவள் என்பதும் அவள் இளவரசரால் ஏமாற்றப்பட்டுப் போனாள் என்பதும் நன்றாகத் தெரிந்தன. இளவரசர் இரண்டரை வருஷகாலமாகப் பலவகையில் ரகசியமாக முயற்சி செய்து அவளுடைய மனசை மயக்கி அவளை வசப்படுத்த யத்தனித்தாராம். அவள் முதலில் அதற்கு இணங்கவில்லை. அதன்பிறகு இளவரசர் ஒரு தந்திரம் செய்தாராம். அவளுடைய முக்கியமான ஒரு வேலைக்காரியை அவர் முதலில் கைவசப்படுத்திக்கொண்டு அவளுக்கு அபாரமான பொருள் கொடுத்தாராம். அந்த வேலைக்காரி எப்போதும் என் சம்சாரத்தின் பக்கத்திலேயே இருப்பவள். ஆதலால், அவள் சதாகாலமும் இளவரசருடைய அழகைப் பற்றியும், சரஸ் குணங்களைப் பற்றியும் புகழைப்பற்றியும் ஸ்தோத்திரமாகப் பேசிக் கொண்டே வந்தாளாம். எனக்கும் இளவரசருக்கும் நிரம்பவும் அந்தரங்கமான சிநேகம் இருப்பதாகவும், இருவரும் ஒரு தாசி வீட்டுக்குப் போய் பழகினவர்களென்றும் சொன்னாளாம். அதன்பிறகு, அவள் இன்னொரு விஷயம் தெரிவித்தாளாம். இளவரசருடைய பிரியப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று நானே என் மனைவிக்குத் தன் மூலமாகச் செய்தி சொல்லியனுப்பியதாக அந்தத் தாதி என் மனைவியிடம் தெரிவித்தாளாம். அப்படி என் மனைவி இளவரசருடைய பிரியப்படி நடந்து கொள்ளாவிட்டால், நான் இனி என் ஆயிசு கால பரியந்தம் அவளுடைய முகத்தில் விழிப்பதே இல்லையென்று நான் சொன்னது போலவும் அவளிடம் வேலைக்காரி தெரிவித்தாளாம். அதற்கும் அவள் இணங்க வில்லையாம். கடைசியாக நான் இரண்டொருநாள் ஊரைவிட்டு கிராமத்துக்குப் போயிருந்த காலத்தில், நான் எழுதியதுபோல

,.V-3