பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53 காணப்படவில்லை. ஆனால், சிறிது தூரத்தில் சுவரில் காணப்பட்ட முளைகளில் கொசு கடிக்காமல் போர்த்துக் கொள்ள ஒரு மஸ் லீன் போர்வையும், குளிருக்காகப் போர்த்துக்கொள்ள ஒரு காஷ்மீர் சால்வையும் கிடந்தன. தான் அந்த மஸ்லின் போர்வையை எடுத்துத் தனது உடம்பை மூடிக் கொண்டு படுக்க வேண்டுமென்ற நினைவோடு அந்த வடிவழகி முளைகளிருந்த இடத்தை நோக்கி இரண்டோரடி எடுத்து வைத்தாள். இடைவழியில் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு பெரிய நிலைக்கண்ணாடி அண்டை அவள் சென்றபோது, அவளது வடிவம் அந்தக் கண்ணாடிக்குள் தென்பட்டது. அதைக் கண்ட லீலாவதி உடனே திடுக்கிட்டு நடுங்கினாள். அவள்தனது தேகத்தில் எவ்வித ஆடையுமின்றி பிறந்த மேனியாயிருந்த அசந்தர்ப்ப வேளையில் யாரோ அன்னிய மனுஷி அங்கே வந்துவிட்டாள் என்ற நினைவே முதன் முதலாக அவளது மனதில் தோன்றியது. ஆகையால், அவள் திடுக் கிட்டாள். அவளது தேகம் தானாகவே கிடுகிடென்று நடுங்கிக் குன்றிப் போயிற்று. மயிர்ச்சிலிர்ப்பும் கூச்சமும் உண்டாயின. ஆனாலும், அடுத்தrணத்தில் அவள் தனது தவறை உணர்ந்து கொண்டாள். அவ்விடத்தில் அன்னியர் யாருமில்லை என்றும், தனது சாயலே நிலைக் கண்ணாடிக்குள் தெரிகிறதென்றும் அவள் எளிதில் உணர்ந்து கொண்டாள். ஆனால், அவள் மனதில் ஒரு வியப்பு மாத்திரம் உண்டாயிற்று.தான் எத்தைைனயோ துன்பங் களுக்கும் இழிவுகளுக்கும் ஆளாகிப் பலவிதக் கவலைகளால் வருந்தியவள் ஆதலால், தான் தனது யெளவன பருவத்தின் புதுமையையும் அழகையும் இழந்திருக்க வேண்டுமென்றும், தனது முகம் முற்றிப் போயிருக்க வேண்டுமென்றும், தான் பெரிய பெண்பிள்ளைபோல மாறிப் போயிருக்க வேண்டு மென்றும், அவள் எண்ணி இருந்த எண்ணத்திற்கு மாறாக, அந்தக் கண்ணாடிக்குள் தோன்றிய வடிவம் சிறிதும் மேனி குலையாத ஒரு பருவகாலத்துப் பெண்ணின் இன்ப வடிவமாகத் தோன்றியது. அவ்வாறு காணப்பட்ட அற்புத மனமோகனசுந்தர