பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பூர்ணசந்திரோதயம் - 5 வடிவம் தன்னுடையதுதானோ என்று அவள் ஒருவித சந்தேகம் கொண்டவளாய்த் தனது வடிவத்தை உற்றுப் பார்த்தாள். சுமார் இருபதிற்கு மேற்படாத யெளவனமும், அழகு ஜ்வலித்த வசீகரமான முகமும், வண்டுகளைப் பழித்த கரிய கண்களும், கருத்தடர்ந்து ஒன்றாகக் கூடிய அற்புதமான புருவ விற்களும், தேவாமிருதம் கசிந்த கனிவான சிவந்த உதடுகளும், முத்துக்கள் போன்ற பற்களும், தந்தத்தில் கடைந்தெடுக்கப்பட்டதுபோன்ற மாசுவறுவற்ற அழகான நாசியும், அடிக்கடி குழிவடைந்த சொகுசான கன்னங்களும் காண்போரது மனதைக் கொள்ளை கொள்ளத் தக்கவையாக இருந்தன. கழுத்திற்குக் கீழிருந்த மற்ற ஒவ்வொரு அங்கமும் அவள் சொர்ண விக்கிரகமோ, அல்லது, தந்தப் பதுமையோ என்று ஐயுறும்படி சிறந்த வனப்பு வாய்ந்து தேஜோமயமாக விளங்கியது. லீலாவதி அபாரமான தனது அழகைக் கண்டு தானே பிரமிப்பு அடைந்தவளாய்த் தன்னை அந்தச் சமயத்தில் யாராவது கண்டால், கண் திருஷ்டி தோஷம் ஏற்படுமோவென்று பயந்தாள். மறுபடியும் அவளது கண்கள் மருண்டு தாமாகவே நாற்புறங்களிலும் திரும்பி அவ்விடத்தில் வேறே யாராவது இருந்து அந்த எழில் வடிவைப் பார்த்துவிடப் போகிறார்களே என்று கவனித்தன. எவ்வித ஆடையுமில்லாது இருந்த நிலைமையில், அவள் தனது நிகரற்ற சுந்தர வடிவத்தைக் காணக் காண அவள் மஸ்லின் எடுக்கப் போனதை மறந்து அந்த வடிவத்தைக் கவனிப்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி சிறிதுநேரம் அப்படியே நின்றுவிட்டாள். ஆனால்,

அவள் அன்று முழுதும் பல இடங்களுக்குப் போய் அலைந்த தனால் அவளது தலை மயிர் சிற் சில இடங்களில் தூக்கிக்

கொண்டிருந்ததை அவள் கண்டாள். ஆதலால், அவள் அதைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நினைவோடு தனது தலைமுடிப்பை அவிழ்த்து விட்டு அபாரமாகப் பரவிக்

கணைக்கால் வரையில் மயில் தோகை போலத் தொங்கியதனது

அளக பாரத்தை அவள் தனது கையால் கோதி, தலையின்

உச்சியைத் தடவிக்கொடுத்து மறுபடியும் முடிந்து கொண்டாள்.