பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி LTi 55 அப்போது அவளது மனதில் ஒருவித விசனம் தோன்றியது. அவ்வளவு அமோகமான கட்டழகைத் தனக்கு அளித்த ஈசுவரன், அதை அனுபவிப்பதற்குத் தகுந்த யோக்கியதை வாய்ந்தவரும், தன் மனதிற்கு உகந்தவருமான ஒரு பூமானைத் தனக்குச் சாசுவதமாக அளிக்காமல் போனதோடு, தனது இல்லற வாழ்க்கை சீர்குலைந்து போகும்படி செய்துவிட்டானே என்ற துக்கமும் கலக்கமும் எழுந்து அவளது மனதை வதைத்துப் புண்படுத்தத் தொடங்கின. உடனே அவளது அகக்கண்ணில் பவானியம் பாள்புரம் ஜெமீந்தாரினது மனோகர வடிவம் தோன்றி அவளைப் பார்த்து சந்தோஷமாகப் புன்னகை செய்வதுபோல அவள் உணர்ந்தாள். அன்றைய தினம் பகலில் நீலமேகம்பிள்ளையைக்கண்டு பேசப் போயிருந்த காலத்தில் அவரது மாளிகையில் சுவரில் மாட்டப்பட்டிருந்த இராமலிங்கம் பிள்ளையின் படத்தைப் பார்த்த முதல் அந்த இன்ப வடிவம் அப்படியே அவளுக்கு எதிரில் நிற்பதுபோல தோன்றிக் கொண்டிருந்தது. ஆகையால், ஒரே அழகு மயமாகவும் யெளவனம் மாறாமலும் இருந்தாலும், அவரும் நீடித்திருந்த சந்தோஷமடையாமல் கடவுள் சதி செய்துவிட்டானே என்ற பெருந்துக்கம் எழுந்து வதைக்கவே, அவளது கண்களில் கண்ணிர் துளித்து நின்றது. தன் மனதிற்கு உகந்த மகா ரம்மிய புருஷனான தனது உண்மைக் காதலன் அகால மரண மடையவும், சிறிதும் இங்கிதம் அறியாதவனும், ஆண்மைத் தனம் என்பதே அற்றவனுமான ஒருவனைத்தானே கணவனாகத் தேடிப்பிடிக்கவும், அவன் தகாத காரியங்களைச் செய்து சிறைச்சாலை புகவும், அதனால் தான் என்றைக்கும் நீங்காத அவமானமடையவும் நேர்ந்ததை நினைக்க நினைக்க, அவளது உள்ளம் கொதித்தது. அவள் பன்முறை நெடு மூச்செறிந்தாள்; அவளது மனதில் பலவித நினைவுகள் தோன்றின: “ஐயோ! பாழுந் தெய்வமே! உனக்குக் கண் அவிந்து போய்விட்டதா? அல்லது, நீ மதிமந்தனாய் விட்டாயா? உன்னை ஜனங்கள் சர்வரrகனென்றும், காருண்ய மூர்த்தியென்றும், பரமதயாளு