பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அடுத்த நாள் வைகறையில் தொழுகையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அருகில் உள்ள அரஃபாத் பெரு வெளியில் ஹாஜிகள் குழுமுகிறார்கள்.

ஹஜ் கடமையை இங்குதான் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது. ஒரே மாதிரியான வெள்ளைச் சீருடை அணிந்த இலட்சக்கணக்கான ஒரே மாதிரியான கூடாரங்களில், ஒரே மாதிரியான வெள்ளை எஹ்ராம் உடையில் தங்கிப் பிரார்த்தனை செய்கின்றனர்.

உலக ஒருமைப்பாட்டு
மாநாடு

ஹஜ்ஜின்போது குழுமும் ஹாஜிகள் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாயிருந்தும், பல்வேறு விதமான மொழிகளையே பேசுபவர்களாயிருந்தும் வெவ்வேறு விதமான கலாச்சார அடிப்படையில் ஆடை அணிகளை அணியும் வழக்கமுடையவர்களாயிருந்தும், பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாயிருந்தும் ஏழை-பணக்காரன், அரசன் - ஆண்டி என்ற பொருளாதார வேற்றுமைக்கு உட்பட்டவர்களாயிருந்தும் கருப்பன் வெள்ளையன் நிற பேதமுடையவர்களாயிருந்தும் இறையில்லத்தின் முன் இந்த வேறுபாடுகள் எதுவும் இல்லாதவர்களாகக் குழுமி ஒரே மாதிரியான எஹ்ராம் வெள்ளுடையில் ஒரே இறைச் சிந்தனையுடன் ஒரே மொழியில் இறையருளை வேண்டி நிற்கும்போது உலக மக்கள் அனைவருமே ஆதி பிதாவான ஆதாமின் மக்கள் என்பதை உலகறிய பறைசாற்றும் ஒப்பற்ற காட்சியாக அமைகிறது. இறைவன் முன் எல்லோரும் ஓர் குலம், ஓர் இனம், ஓர் நிறை என்ற உன்னத நிலையை செயல் வடிவில் உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது. 40 இலட்சத்து ஹாஜிகளும் வியக்கத்தக்க ஒற்றுமையுடனும், ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் ஹஜ்ஜை நிறைவேற்றுவதன் மூலம் உலக சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, ஆண்டு தோறும் ஹஜ் திருநாளின்போது நிலைநாட்டுகிறார்கள்.