பக்கம்:பொன் விலங்கு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி Í 79

அது. விலைவாசிகள் அதிகமாயிருக்கும். சிக்கனமாயிருக்கப் பழகிக்கொள்.... இன்னொரு செய்தி. வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை நானும் கல்லூரி நாளில் பழகிய நெருக்கமான நண்பர்களும் ஒட்டலில் உனக்கொரு விருந்து வைத்திருக்கிறோம். அதையும் இப்போதே நினைவு வைத்துக்கொள்..." என்று சொல்லிக்கொண்டே புறப்படுவதற்காக மணலைத் தட்டிவிட்டு எழுந்தான் குமரப்பன்.

'எனக்கு வேலை கிடைத்தால் நீங்கள் எல்லோரும் விருந்து தந்து விடை கொடுக்க வேண்டும் என்பது என்ன முறையோ?"

"முறைதானடா சத்யம் நம் நண்பர்களில் இன்னும் வேலை கிடைக்காதவர்கள் பலர் இருக்கிறார்களே...? அவர்களுக்கெல்லாம் உனக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதை ஞாபகப்படுத்து வதற்கும் உனக்கு விடை கொடுப்பதற்கும் சேர்த்துத்தான் இந்த விருந்து.'

"நான் மதுரையை விட்டுப் புறப்பட்டுப் போகிறேன் என்பதை நம் நண்பர்களே நம்பமாட்டார்கள் குமரப்பன் என்னைப் போல் இந்த ஊரின்மேல் மோகம் கொண்டவன் இருக்க முடியாது!”

'இருந்தும் இப்போது நீ மல்லிகைப் பந்தலின்மேல் கொண்டிருக்கிற மோகம் அதிகமாகி விட்டது. இல்லையா?"

'மோகம் என்று சொல்லாதே. அது மதுரையின்மேல் மட்டும்தான் உண்டு. மல்லிகைப் பந்தலைப் போன்ற மலைநாட்டு நகரத்தின் சரியான நிர்வாகத்தோடு நடைபெறுகிற ஒரு கல்லூரியில் வேலை பார்க்க நினைக்கிறேன் நான். அதை மோகம் என்று நீ சொன்னால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்."

"சரி, சரி எப்படிச்சொன்னால் ஒப்புக்கொள்வாயோ அப்படியே வைத்துக்கொள். இப்போது புறப்படு. மணி பதினொன்றாகப் போகிறது. -குமரப்பன் துரிதப்படுத்தவே மணல் மேட்டிலிருந்து சத்தியமூர்த்தியும் எழுந்திருந்து புறப்பட்டான்.போகும்போதும்பேசிக் கொண்டே போனார்கள் நண்பர்கள்.

"மல்லிகைப் பந்தல் முதல்வரைப்பற்றி நினைத்தால்தான் தயக்கமாக இருக்கிறதடா குமரப்பன். பார்த்த சில மணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/181&oldid=595170" இலிருந்து மீள்விக்கப்பட்டது