பக்கம்:பொன் விலங்கு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 217

இறங்கிப் போய்விட்டார். பஸ் கண்டக்டர் இறக்கி வைத்த சத்தியமூர்த்தியின் பெட்டிகளும் சாமான்களும் தரையில் இருந்தன. எங்கே போய்த் தங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி.

பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வருவதாக நச்சரித்துக் கொண்டு இரண்டு மூன்று கூலிக்காரச் சிறுவர்கள் அவனை சூழ்ந்து நின்றார்கள். நிற்கவே முடியாமல் குளிர்ந்த மலைக் காற்று சுழித்துச் சுழித்து வீசிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பூபதியின் வீட்டைத் தேடிக் கொண்டு தங்கப் போவது அநாகரிகமாக இருக்குமென்று தயங்கினான் அவன். கல்லூரிக்குப் போகலாமென்றால் இந்த வேளையில் அங்கு யார் இருக்கப் போகிறார்கள்?' என்று நினைத்து அந்த எண்ணத்தையும் கைவிட்டான். ஏரிக்கரையில் லேக் வியூ லாட்ஜ' என்று ஒரு பெரிய விடுதி இருப்பதாகச் சொல்லி அங்கே போய்த் தங்கிக் கொள்ளலாமென்று கூலிக்காரப் பையன்வற்புறுத்திக் கொண்டிருந்தான். என்ன செய்வதென்று அவன் தயங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பூபதியின் மகள் பாரதியே காரில் வந்து இறங்கினாள். அவளுடைய வரவும் வணக்கமும் ஒரே உற்காசமாக இருந்தன.

"நாளைக் காலையில் கல்லூரி திறக்க இருப்பதால் நீங்கள் இன்றிரவு கடைசி பஸ்ஸுக்கு எப்படியும் வந்துவிடுவீர்கள் என்று நானாக நினைத்துக்கொண்டு தேடி வந்தேன் சார் நான் நினைத்தது சரியாகப் போயிற்று. அப்பா ஊரில் இல்லை. எஸ்டேட்டுக்குப் போயிருக்கிறார். புதிதாக வருகிற ஆசிரியர்களை வரவேற்றுத் தங்குவதற்கு இடம் கூட ஏற்பாடு செய்யாமல் பிரின்ஸ்பலும் ஹெட்கிளார்க்கும் என்னதான் வெட்டி முறிக்கிறார்களோ பாவம்' நீங்களானால் பஸ்ஸிலிருந்து இறங்கி இந்தக் குளிரில் நின்று திண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள், வாருங்கள். உங்களை கல்லூரியில் கொண்டு போய் விடுகிறேன். கல்லூரி வாட்ச்மேனை எழுப்பி ஆசிரியர்கள் ஒய்வு கொள்ளும் அறையில் இன்றிரவு தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யலாம்' என்று அவள் கூறியபோது சத்தியமூர்த்தியின் நிலை தர்மசங்கடமாக இருந்தது. ஆர்வமும் அன்பும் நெகிழ்கிற குரலில் அவள் வேண்டிக் கொள்வதை அவனால் மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் தயக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/219&oldid=595255" இலிருந்து மீள்விக்கப்பட்டது