பக்கம்:பொன் விலங்கு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பொன் விலங்கு

செல்வந்தர் வீட்டு விருந்துக்கே உரிய களையோடும், கம்பீரத்தோடும் இலங்கிக் கொண்டிருந்தன.

"தமிழ்டிபார்ட்மென்ட்காரர்கள் எல்லாம் இதோ இங்கே உட்கார வேண்டும்' என்று காசிலிங்கனாரும், மிஸ் வகுளாம்பிகையும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பகுதியைச் சுட்டிக் காண்பித்தார் கல்லூரி முதல்வர். சத்தியமூர்த்தியும் அங்கே போய் உட்கார்ந்தான். சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் எல்லோருடனும் சிரித்துச் சிரித்து உரையாடிக் கொண்டிருந்த பூபதி நடுவே சத்தியமூர்த்தி உட்கார்ந்திருந்த பக்கமாகவும் ஒரு முறை வந்தார். சத்தியமூர்த்தி எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தினான்; அவரும் அன்போடு விசாரித்தார். பின்பு காசிலிங்கனார் பக்கமாகத் திரும்பி, "இவர் உங்கள் டிபார்ட்மென்டுக்குப் புது விரிவுரையாளராக வந்திருக்கிறார். சத்தியமூர்த்தி. முற்போக்கும், ஆர்வமும் நிறைந்த இளைஞர். நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்...' என்று சத்தியமூர்த்தியைக் காண்பித்துச் சொல்லிவிட்டு மேலே நடந்தார்.

பூபதியின் மகள் பாரதி விருந்துக்கு வந்திருந்த நகரத்துப் பிரமுகர்களின் வீட்டுப் பெண்மணிகள் கூடியிருந்த கூட்டத்துக் கிடையே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும், அவளுடைய மை தீட்டிய கருவிழிகள் அடிக்கடி சத்தியமூர்த்தி வீற்றிருக்கும் பக்கமே திரும்பிக் கொண்டிருந்தன. தன்னைச் சுற்றியிருக்கிறவர்களுக்காகத் தன் வாயும் இதழ்களும் சிரித்துக் கொண்டிருந்த அதே வேளையில் சத்தியமூர்த்திக்காகச் சிரிக்கும் அந்தரங்கமான நளின நகையைக் கண்களால் செய்து கொண்டிருந்தாள் அவள். ஒதுக்குப் புறமான இந்த மலைநாட்டு நகரத்துக்குக்கூட இத்தனை விதமான ஹேர் ஸ்டைல் களும் (கொண்டை அலங்காரங்கள்) வந்து பரவியிருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்வது போல அத்தனைவிதமான தலையலங்காரங்களுக்கும் எடுத்துக்காட்டான பெண்கள் அந்த விருந்துக்கு வந்திருந்தார்கள். பத்துப் பன்னிரண்டு பேர் ஒரே சமயத்தில் சேர்ந்து ஜலதரங்கம் வாசிப்பதுபோல் சிரிப்பொலிகள் அந்தப் பெண்மணிகளின் கூட்டத்திலிருந்து எழுந்து பரவிக் கொண்டிருந்தன. சத்தியமூர்த்தி மனிதர்களையும் அவர்களுடைய மனப்பான்மைகளையும் படித்துமுடிக்கும் கபாவமான சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும் அந்த விருந்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/250&oldid=595325" இலிருந்து மீள்விக்கப்பட்டது