பக்கம்:பொன் விலங்கு.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 395

- சத்தியமூர்த்தியின் அறை இருந்த மாடிக்குக் கீழே ராயல்பேக்கரி ரொட்டிக்கிடங்கின் அருகே சிறு கடைஇருந்த இடம் ஒன்று காலியாகி டு லெட் என்ற போர்டு தொங்குவதை ஒருநாள் காலையில் சத்தியமூர்த்தியும் குமரப்பனும் தற்செயலாகக் காண நேர்ந்தது. அப்போது குமரப்பன் ஒரு நோக்கமும் இல்லாமல் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவல் ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு கம்மாவிசாரிப்பவன்போல்சத்தியமூர்த்தியிடம் அந்த இடம்யாருக்குச் சொந்தமானது, அதற்கு என்ன வாடகை கேட்பார்கள் என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான்.நண்பன் எதற்காக அந்த இடத்தைப் பற்றி அவ்வளவு விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான் என்பதை அன்று மாலை கல்லூரியிலிருந்து திரும்பிவந்தபின்பே சத்தியமூர்த்தியால் விளங்கிக் கொள்ள முடிந்தது.

மாலையில் அவன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்து அறைக்குப் போவதற்காக மாடிப்படியேறியபோது ரொட்டிக் கடைக்காரர்.அவனைக்கூப்பிட்டுச்சொன்னார்:"சார் கீழே காலியான கடையை உங்க சினேகிதருக்கு வாடகை பேசி விட்டிருக்கிறேன்."

"சினேகிதருக்கா? எந்த சினேகிதர்?' என்று சத்தியமூர்த்தி திகைத்தபோது "அதோ பாருங்க! அவரே கடையில் போர்டு மாட்டிக்கிட்டிருக்காரு' என்று கடையைச் சுட்டிக் காண்பித்தார் ரொட்டிக்கடைக்காரர். அப்போதுதான் புது வர்ணம் பூசப்பட்டு மின்னும், குமரப்பன் ஆர்ட்ஸ் என்ற விளம்பரப்பலகையை அந்தக் கடையின் முகப்பில் மாட்டி ஆணி அடித்துக் கொண்டிருந்தான்

குமரப்பன்.

234

- 米

உடம்பினால் மட்டும் முதுமை ய ை கி ற வ ர் க ைள ய | வ து மன்னிக்கலாம்; மனத்தினாலும் முதுமை அடைந்து தளர்ந்து விடுகிறவர்களை மன்னிக்கவே முடியாது.

- - 米

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/397&oldid=595637" இலிருந்து மீள்விக்கப்பட்டது