பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பொய்ம் முகங்கள் "ஏன் திடீர்னு இப்படிக் கேட்கிறிங்க?" "ஒண்னுமில்லே.குடும்பஸ்தரா யாராவது வந்தால் அவங்களுக்கு விடலாமேன்னு பார்த்தேன்...' - 'முதல் முதலா நான் உங்களைத் தேடிவந்தப்பவே நீங்க இதைச் சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக் கும்...' - - - "இப்பவும் நான் உங்களைக் கட்டாயப் படுத்தவோ, வற்புறுத்தவோ செய்யலே. ஏதோ தோணிச்சு. சொன், னேன்..." - - . .", உங்களுக்காகத் தோணிச்சா? இல்லே யாராவது சொன்னாங்களா?' - பத்தர் பதில் சொல்வதற்குச் சிறிது யோசிப்பதாகப் பட்டது. சுதர்சனன் விடவில்லை. - . . நான் குடிவர்ரப்பவே எல்லா விவரமும் கேட்டுக் கிட்டுச் சம்மதிச்ச பிறகுதானே ரெண்டு மாசம் அட்வான்ஸ் வேணும்னு கேட்டு வாங்கிக்கிட்டீங்க?" "அதெல்லாம் சரிதான்!......" என்று சொல்லவந்ததை முடிக்காமல்ே இழுத்தார் பத்தர். புத்திசாலியான சுதர்சன னுக்குப் பத்தரின் மனத்தில் ஒடும் எண்ணங்களைச் சுலப மாகவே அனுமானம் செய்துவிட முடிந்தது. அவர் தேடி வந்ததையும், சுவர்களை ஏறிட்டு நிமிர்ந்து பார்த்துவிட்டுக் கேட்டதையும், சுற்றி வளைத்துப் பேசிய பேச்சுக்களையும் வைத்தே அவரைக் கண்டுபிடித்துவிட்டான் அவன். ஆனால் பத்தர் என்னவோ தமது அசல் முகத்தை அவன் கண்டு பிடித்துவிட முடியாதபடி வேறு வேறு முகங்களை மாற்றி : மாற்றி அவனுக்குக் காண்பித்து அவனை ஏமாற்றிக்கொண் டிருந்தார். - r. - மனசிலே எதாச்சும் இருந்தா நேருக்கு நேராச் சொல் விடுங்க பத்தரே! சுத்தி வளைக்காதீங்க...' என்று சுதர்ச ஆனனே அவரை நேரே கேட்டுவிட்டான். அவர் மென்று