பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பொழுது புலர்ந்தது

தங்கள் அருமந்த குழந்தைகளைத் தனியே விட்டு விட்டு ஒடும் படியான கிலேமை கூட வந்துவிட்டது.

சாதாரணமாக நமது நாட்டுக்கு பர்மா முதலிய நாடு களிலிருந்து பத்து சதமானத்துக்குக் குறைவாகவே தானியங்கள் வந்துகொண்டிருந்தன. அதனல் பர்மா ஜப்பான் வசமாகி விட்டபோதிலும் பிரமாதமான தானியப் பஞ்சம் ஏற்பட்டுவிட வேண்டியதில்லை. ஆயினும் விலைவாசிகள் யுத்த ஆரம்ப காலத்தில் 100 என்றால், 1943-ல் 254 ஆக ஏறிவிட்டன.

ஆனல் நம்மை ரகூதிப்பதற்காக கடவுளால் சிருஷ் டிக்கப்பட்ட இங்கிலாந்தின் நிலைமை என்ன ? அங்கே நாட்டில் விளைந்த உணவுப் பொருள்கள் 5 கோடி ஜனங் களில் 2 கோடிப் பேருக்கே போதுமானதாக இருந்தன. பாக்கி 3 கோடிக்கும் அயல்நாடுகளிலிருந்தே வந்துகொண் டிருந்தன. ஆதலால் அயல் நாடுகளில் இருந்து வர முடியாததும், வந்தாலும் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் களைத் தப்பி வருவது கஷ்டமாய் இருந்ததுமான யுத்த காலத்தில் ஆகாரப் பஞ்சம் அதிகமாக உண்டாய் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அங்கே உணவுப் பொருள் களின் விலை 25 சதமானமாகவே கூடியிருந்தது. போர் என்றதும் போதுமான உணவு உண்டாக்க ஆரம்பித்து விட்டதாலும், ஜனங்களிடை பணக்கஷ்டம் இல்லாத தாலும், விலைவாசிகள் சிறிதளவே ஏறியிருந்ததாலும் இங்கிலீஷ் ஜனங்கள் ஆகாரக் கஷ்டத்தைக் கொஞ்சங் கூட அநுபவிக்கவில்லை. அவர்கள் முன்னிலும் அதிக ஆரோக்கியமாக இருப்பதாகக்கூடச் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

ஆனல் இந்தியாவில் மட்டும் வீட்டில் அரிசியிருக்க மக்கள் பட்டினி கிடப்பானேன்? அதிலும் வங்காளம் இந்தியாவின் கெற்களஞ்சியமாயிற்றே. அப்படியிருக்க