பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்காளப் பஞ்சம் 127

அங்கே இந்தக் கொடுமையான பஞ்சம் வரக் காரணம் என்ன ?

சர்க்கார் உணவுப் பொருள்களை ஏராளமாக வாங்கி அயல்நாடுகளுக்கு அனுப்பியதும், சேனேகளுக்கு விநியோ கித்ததும், அதிகமாக உற்பத்தி செய்வதற்குத் தீவிர மான ஏற்பாடுகள் செய்யாததும், சகல பாகங்களுக்கும் சரியாக விநியோகிக்காததுமே முக்கியமான காரணங் களாகும்.

அரசாங்கத்தார். இதுவிஷயத்தில் எவ்வளவு அஜாக் ரதையாக இருந்தார்கள் என்பதற்கு பஞ்சம் ஆரம்பமான காலத்தில் அமரி துரை “ இந்தியாவில் ஜனங்களுக்கு இப் பொழுது அதிகமான வருமானம் கிடைப்பதால் அதிக மான உணவே உண்கிறார்கள் ‘ என்று சர்வ சாவ தானமாக உரைத்ததே போதுமான சான்று.

அது மட்டுமா? பின்ைெரு சமயம் வங்காளத்தில் பஞ்சத்தால் இறந்தவர் தொகை என்ன என்று கேட்ட பொழுது “ பத்து லட்சத்துக்குக் குறைவாகவே’ என்று சற்றும் மனம் பதருமல் கூறினர். 10 லட்சம் வேண்டாம், 10ப்பேர்கூடப் பட்டினியால் இறக்கலாமா? ஆளுல் பரம கருணு வள்ளல்களாகிய பிரிட்டிஷாருடைய ஆகதி யில் 10 லட்சம் பேரா இறந்தனர் ? கல்கத்தா சர்வகலா சாலேயார் கடத்திய பரிசோதனையின்படி 35 லட்சம் போல்லவோ இறந்தனர் ? நவம்பர் மாதம் நடந்த மத்திய சட்ட சபையில் வங்காளம் முழுவதும் நேரில் போய்ப் பார்த்து வந்த இந்திய ஊழியர் சங்கத் தலைவர் பண்டித குன்ஸ்ரு அங்கே வாரந்தோறும் 50 ஆயிரம் பேர் இறந்து வருவதாகக் கூறினரே, அப்படியிருக்க அமரி உண்மையை இப்படி மறைப்பானேன்?

காங்கிரஸ் அதிகாரத்தை விட்டு விலகுங்கள் என்று கூறினல், நாங்கள் இந்தியாவின் கேஷமத்துக்கு ஜவாப்