பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்காளப் பஞ்சம் 129

ஜனதிபதி ரூஸ்வெல்ட் விஷயம் என்ன ? அவர் இந்தியா வைப்பற்றி சிந்திக்காமல் இருக்கவில்லை. ஆனல் 1943 டிசம்பரில் அமரிக்கக் காங்கிரஸின் முன் பேசிய பொழுது இந்தியா ஜப்பானே ஜெயிப்பதற்கு எவ்வளவு முக்கிய மான பாசறை என்பதைப்பற்றி மட்டுமே குறிப்பிட் டாரே அன்றி இந்தியாவில் படை படையாக அள்ளி வரும் பஞ்ச யமனப்பற்றியோ, அதைத் தடுப்பதற்கு வேண்டிய தேசிய சர்க்காரைப்பற்றியோ ஒரு வார்த்தை கூடக் கூறினரில்லை.

இப்படிப் பிரிட்டனும் அமரிக்காவும் இந்தியாவின் சுதந்திர விஷயத்தில் அலட்சியமாய் இருப்பதைக் கண்டே அமரிக்கப் பத்திரிகைகள் எல்லாம் இந்த யுத்தம் ஏகாதி பத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகச் செய்யும் யுத்தமாக ஆய்விடும்போல் இருக்கிறதே என்று ரூஸ்வெல்ட்டுக்கு நினைவூட்ட ஆரம்பித்தன. ஆல்ை ஏகாதிபத்திய யுத்தமாக இனிமேலா ஆரம்பிக்கப் போகிறது? என்றுவரை இந்தி யாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படவில்லையோ அன்றுவரை யார் என்ன சொன்னுலும் ஏகாதிபத்திய யுத்தமே என் பதில் சந்தேகம் வேண்டியதில்லை. அப்படியே தான் பெர்னர்ட் ஷா போன்ற பிரிட்டிஷ் அறிஞர்களும், பெர்ல் பக் போன்ற அமரிக்க அறிஞர்களும் அடிக்கடி கூறி வந்தார்கள்.

இப்படி அமரிக்காவும் பிரிட்டனும்தான் அலட்சிய மாக இருந்தன என்று எண்ண வேண்டாம். நமது ஜின்ன சாகிப் அவர்களும் இந்த நேரத்திலாவது சமரச மாய்ப் போவோம் என்று எண்ணுமல் டிசம்பர் 23-ம்தேதி கராச்சியில் கடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் நமக்குச் சொந்தமான முஸ்லிம் பிரதேசங்களை நாம் கைப்பற்றி ஆளாமல் இருந்து விடப் போவதில்லே ‘ என்று கர்ஜிப் பதிலேயே கண்ணுயிருந்தார்.

563–9