பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பு வேற்றுமை 19

ஆகவே போருக்குப் பின் ஏற்படும் புது உலகில் ஐரோப்பா சேருமேயன்றி ஆப்பிரிக்காவோ ஆசியாவோ சேராது என்பதும் உலகமுழுவதிலும் ஜனநாயகத்தை யும் சுதந்திரத்தையும் ஏற்படுத்துவதற்காகவே போர் நடத்தப்படுகிறது என்று கூறிவருவது வெறும் வேவுமே என்பதும் தெளிவாகிவிட்டன. *

இப்படிப் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கூறிய பிறகும் இங்குள்ளவர்கள் புதிய சகாப்தக் கனவுகாண நியாயம் உண்டோ ? ஆனல் நன்மை செய்வதே மனித குணத்தின் பிரதான அம்சம் என்பதும் தவறு செய்வதை எடுத்துக் காட்டி நல்வழிப்படுத்துவதே நமது கடமை என்பதும் மகாத்மா காந்தியடிகளின் அசையாத நம்பிக்கை. அத ளுல்தான் அவர் சேம்பர்லேன் துரை கன்னத்தில் அறைக் ததுபோல் கூறிய பின்னரும் -

பிரிட்டிஷார் நம்மை அவர்களுடன் ஒத்துழைக்க முடியாதபடிதான் செய்து வருகிறார்கள். ஆயினும், காம் அவர்களுடைய யுத்த முயற்சிக்கு எவ்வித கஷ்டமும் ஏற்படுத்தலாகாது -என்று நவம்பர் மாதம் 3-ம் தேதி ஹரிஜன் பத்திரிகையில் எழுதுகிரு.ர்.

அது மட்டுமா? அவர் டிஸம்பர் 2-ந் தேதி “பிரிட்டன் சண்டையில் மாட்டிக் கொண்டிருக்கிறது, அந்தச் சமய மல்லவா சட்ட மறுப்பு ஆரம்பிக்க வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆல்ை அது தவறு. பிரிட்ட னுக்கு இடைஞ்சல் செய்யும் நோக்கத்தோடு ஒருநாளும் சட்டமறுப்பு ஆரம்பிக்கக் கூடாது’ என்றும் கூறினர்.

இதுவல்லவா மகாத்மாக்களின் லட்சணம்? ஜாலி யன்வாலா அக்கிரமத்தைக் கண்டு மனம் பொருமல் அல்லவோ 1919-ல் சத்தியாக்கிரகக் கொடியை முதன் முதலாக உயர்த்தினர். அன்றுமுதல் அரசாங்கம் செய்து வரும் அநீதிகள் எத்தனே ? அவற்றை எல்லாம் மறந்து