பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I04 திலே வெளியிட்ட அபிப்பிராயத்தை இங்கே தெரிவிக் கிறேன். கவர்ன்மெண்டார் லிபரல் கட்சியாயிருந்தாலும் சரி, கன்ஸர்வேடிவ் கட்சியாயிருந்தாலும் சரி, மனப் பூர்வமாக நமக்கு ஒன்றும் விட்டுக் கொடுத்து விடமாட் டார்கள், என்பதை மட்டும் உறுதியாக நம்புங்கள். லிபரல் கவர்ன்மெண்ட் என்ருல் யாதெனில், மே ற் ப டி. கவர்ன்மெண்ட் மெம்பர்கள் லிபரல் கொள்கைகளே விரும்பி தமது தேசத்தின் ஆட்சியை மேற்படி கொள்கை களின்படி ஆளக் கருதுகிருர்களென்று அர்த்தம். இவர்கள் இங்கிலாந்திலே லிபரல்களாயிருந்து இந்தியாவுக்கு வந்த வுடனே கன்ஸர்வேடிவ் கட்சியராக மாறிவிடுகிருர்கள். இங்கே விவில் உத்யோகஸ்தர்களாக வருவோர் பள்ளிக் கூடங்களிலும் காலேஜ்களிலும் நல்ல லிபரல்களாயிருக் கிருர்கள். இங்கே வந்து ஆங்கிலோ இந்திய மனிதர் களுடன் பழகியும், ஆங்கிலோ இந்திய ஸ்திரீகளை விவாகம் செய்து கொண்டும் அவர்களுடைய கொள்கைகள் மாறிப்போய் விடுகின்றன. எனவே, அவர்கள் இந்தியா விலிருந்து புறப்படும் சமயத்தில் கன்ஸர்வேடிவ் கட்சிய ராகவே இருக்கின்றனர். இதே அனுபவம் எல்லோருக்கும் இருக்கின்றது. ஆகவே, லிபரல் கட்சியாக இருந்தாலும், கன்ஸர்வேடிவ் கட்சியாக இருந்தாலும், முக்கியமான விஷயம் யாதெனில் இவர்களில் எவரேனும் உங்களுக்கு உரிமைகளும், அனுகூலங்களும் கொடுக்கத் தயாராகயிருக்கிரு.ர்களா? நூல் ஆராய்ச்சியுடைய அறிஞர்கள் மேற்படி உரிமைகள் ஒரு கீழ்ப்பட்ட தேசத்தாருக்கு காலக்கிரமத்திலே கொடுக்கத் தக்கவை தானென்பதை ஒப்புக்கொள்ளக் கூடும். ஆனல் எவருமே அறிவு சம்பந்தப்பட்ட மட்டில் ஒரு வி ஷ ய த் ைத ஒப்புக்கொள்வதிலே என்ன பிரயோஜனம்: ஒரு தத்துவ ஞானியாகிய ராஜதந்திரி