பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10ía ஜனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசுவது அலெளகீக மென்ற போதிலும் விவகாரத்தைத் தெளிவாக விளக்கு வதற்குப் பெயர்களைக் குறிப்பிட்டே தீரவேண்டியிருக் கிறது. இது தான் விஷயங்களின் நிலை. இதற்கு நமது புராதனப் பிரார்த்தனை முறைகள் சிறிதேனும் பயனற்றவை யென்று புதுக் கட்சியார் அறிகிரு.ர்கள். இங்கிலாந்தின் எலெக்டர்களின் கூட்டத்தை எல்லாம் உங்கள் அபிப் பிராயத்திற்குத் திருப்பி, அதன் பேரில் மந்திரிகள் எல்லாம் இந்தியாவிற்கு அனுகூலமுள்ளவர்களாய் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் இங்குள்ள அதிகாரிகளை தமது விருப்பத்திற்கு அடங்கும்படி செய்து, இவ்வாறெல்லாம் நடப்பது அசாத் தியம் என்று நாங்கள் சொல்லுகிருேம். இப்பொழுது பழைய கட்சிக்கும் புதுக் கட்சிக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளங்குகிறதல்லவா? சர்க்கார் அதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் செய்வது சிறிதேனும் பயன்பட மாட்டாது. இவ்விஷயத்தில் பழைய கட்சிக்கும் புதிய கட்சிக்கும் அபிப்பிராய பேதம் கிடையாது. ஆனல் பழைய கட்சியார் பிரிட்டிஷ் தேச ஜனங்களுக்கு விண்ணப்பம் செய்து பார்க்கலாம் என்று நம்புகிருர்கள். நாங்கள் அதை நம்பவில்லை. எங்களுடைய எண்ணம் இப்படி இருப்பதனல் நாம் மற்ருெரு உபாயம் தேடவேண்டுவது அவசியம் என்று ஏற்படுகிறது. வேருெரு உபாயம் இருக்கவே செய்கிறது. நாம் சும்மா இருக்கப் போகிறதில்லை. நமது விருப்பம் நிறைவேறுவதற்கு மற்ருெரு வழியைத் தேடவே போகின் ருேம். நாம் நம்பிக்கை யிழந்து விடவில்லை. நமக்கு நிராசை ஏற்பட்டு விடவில்லை. நம்முடைய சொந்த முயற்சிகளிளுலே நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையே புதிய கட்சிக்கு ஆதார மாகிறது.