பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 ஆளுவோர் ஆளப்படுவோருக்கு உதாரத் தன்மை யினல் அனுகூலங்கள் செய்து கொடுத்து ராஜ்யத்தை இழந்தார்களென்பது கிடையாது. உலக சரித்திரத்திலே இவ்விதமான சம்பவம் எக்காலத்திலும் நிகழ்ந்ததில்லை. பெரிய அரசுகள் அளவற்ற போக விருப்பத்தாலும், மிதமிஞ்சி அதிகாரம் நடத்துவதாலும், தமது யதார்த்த மான நிலையை மறந்து விடுவதனாலும், இது போன்ற வேறு காரணங்களாலும் இழக்கப்படுகின்றன. ஆனல் ஆட்சி புரிவோர் ஆளப்படுவோருக்கு அதிகாரங்கள் விட்டுக் கொடுத்து விடுவதால் எந்த ராஜாங்கமும் முடிவு பெற்றது கிடையாது. உங்களுக்கு மகாராணியின் பகிரங்க. சாஸனம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அது மிகுந்த தாராள சிந்தனையுடைய சாஸனமேயாம். ஆனல் அது காங்கிரளின் முயற்சியில்லாமலே பெறப்பட்டது. நீங்கள் மிகுந்த கலகம் செய்யத் தலைப்பட்டபடியால் ராஜாங்கத்தார் உங்களை அமைதிப்படுத்த முயன்ருர்கள். அதன் பேரில் நீங்கள் கேட்காமலே உங்களுக்கு மகாாராணி சாஸனம் கிடைத்தது. அப்போது காங்கிரஸும் கிடையாது. விண்ணப்பமும் கிடையாது. அந்த சாஸனம் மிகுந்த நன்மையானதும் தயவுடையதுந்தான். மகராணி உங்கள் மனதிலே ஆசைகளேற்படுத்தும்படியான வார்த்தைகள் போட்டு அந்த சாஸனத்தை பிரசுரிக்க வேண்டும் என்று மிகுந்த ஆத்திரங்கொண்டவராயிருந்தார். அந்த ஆத்திர மெல்லாம் உங்கள் விண்ணப்பத்திலிருந்தா ஏற்பட்டது? 1858ம் வருஷத்திற்கு நெடுங்காலத்திற்குப் பிறகுதானே நீங்கள் உங்கள் வி ன் ன ப் ப வழிகளெல்லாம் தொடங்கினர்கள்? சிறிது காலத்திற்கப்பால் மகாராணி யின் சாஸனம் அர்த்தமில்லாத வெற்றுக் கடுதாசியாய் போய்விட்டது. ஏனென்ருல், அந்த சாஸனத்தின் நிபந்தனைகளை வற்புத்தும் சக்தியை நீங்களிழத்து