பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 கலக சமயத்தில் இவர் அங்கு இருக்கவேயில்லை என்றும், போலீஸார் அவரை அநீதியாக அடைத்து விட்டார்கள் என்றும் ஊர்க்காரர்கள் பேசிக்கொள்கிருர்கள்." குருநாத அய்யர் போலீஸ் ஹெட்.கான்ஸ்டேபிளாக இருந்தவர். வ. உ. சி.-சிவா இவர்களின் பேச்சுக் கேட்டு வேலையை உதறியவர். ஆயிரத்துத் தொளாயிரத்து எட்டாம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18. ந்தேதியிட்ட இந்தியா’ பத்திரிகையிலே பின்வருமாறு எழுதினர் பாரதியார் : "பூர் சிதம்பரம்பிள்ளை மேற்படி விசாரணையைக் கேலிக் கூத்து என்று சொல்லியது முழுவதும் ஒக்கும். கேஸ் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வெகு ஆச்சர்யமாக இருக்கிறது. ரீ சிதம்பரம்பிள்ளை பேசியதில் ராஜதுரோக மொன்றும் இல்லாவிட்டாலும் இவரது பிரசங்கத்தினல் தான் கலகம் உண்டாயிற்றென்றும் ஸ்தாபிக்கப் பார்க் கிரு.ர்கள். பூரீ பிள்ளையின் கதியையும் அவரது பெருந் தன்மையையும் கவனிக்கும்போது அளவற்ற மனக்குழப்பம் ஒரு புறத்திலும் சந்தோஷம் ஒரு புறத்திலுமாக உதிக் கின்றன.” 1908 - ம் ஆண்டு ஏப்ரல் 25 - ந் ேதி வெளியிட்ட "இந்தியா’ பத்திரிகையிலேயே மேலும் எழுதினர் பாரதியார். 'இம் மகானது கேஸ் இன்னும் இழுத்துக்கொண்டே போகிறது. இவர் மேலுள்ள முதலாவது ராஜத்துரோகக் கேஸில் பிராசிகூஷன் தரப்பு விசாரணை முடிந்துபோய் விட்டது. இர ண் டா வது ராஜத்துரோகக் கேஸ் (ரீ சுப்பிரமணியசிவம் ராஜத்துரோகக் குற்றம் செய்த தாகவும் அதற்கு ரீ சிதம்பரம்பிள்ளை உடந்தையாக