பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 மேம்பட்டவர் செட்டியார்" என்று சொல்லிவிட்டுப் பாடினர். சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? -புதுவை சபாபதிக்கு வேறு தெய்வம் சமான மாகுமா? -புதுவை அபாரமான அருளுடைமையில்ை அடக்கிச் சினந்தன்னை அன்பினை மேற் கொண்டான் -புதுவை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? பாட்டைக் கேட்டுக்கொண்டே மாடிக்கு வந்தார் செட்டியார். 'பாரதியாரே! நான் வாடகை கேட்க வரவில்லை. தாங்கள் புகழும் அளவு பொறுமை எனக்கில்லை. தங்கள் அருள் வாக்கினல் புகழப்பட்டதால் இனிமேல் பொறுமை வரட்டும்" என்று கூறி பாரதியை வணங்கினர். (பாரதியும் கவிதையும்-தங்கம்மாள் பாரதி) ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு சூலை மாதம் அவர் எழுதிய நாட் குறிப்பு ஒன்று நமக்குக் கண்ணிர் வரச் செய்கிறது. பாரதியார் புதுவையிலே எவ்வாறு வறுமையுடன் போராடினர் என்பதற்கு இதுவே சான்று. "காலை கண்விழிக்கும் போதே பணம் என்ற ஞாபகம். வியாதி, பயம், சோம்பர் இவை வந்து இன்று காலைப் பொழுதையும் வீணுக்கி விட்டன. செ- வழக்கம் போல வந்தான். பரமேச்வரி மகாசக்தி உன்னிடத்தில் அமரத் தன்மை கேட்கிறேன். என்னை மனக்கவலையிலிருந்து விடுவிக்க வேண்டும். முதலாவது-எனக்கு என்மீது வெற்றிவரவேண்டும்,