பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[218 சூதாடி நாடு கவர்ந்த இந்தப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டாரே! அது ஏன்? பாஞ்சாலியின் துகில் உரி படலத்தைப் பாடினரே! அது ஏன்? பின்னே அடிமைப் பட்டோர் அடிமை கொண்டவர் மீது போர் தொடுத்து உயிர் குடிப்பதாகச் சபதம் செய்த பகுதியைப் பாடினரே! அது ஏன்? பாஞ்சாலி சபதம்’ என்று மகுடமிட்டாரே? அது ஏன்? சத்ரபதி சிவாஜி தமது சேனைக்குக் கூறியதாகச் சுமார் 180 அடிகள் பாடியிருக்கிருரே! ஏன் பாடினர்.? குருகோவிந்தரைப் பற்றிப் பாடியிருக்கிருரே! ஏன் பாடினரி? பாரதியின் நோக்கம் என்ன? நோக்கம் ஒன்றே. அ. தாவ து, மக்களைத் தட்டி எழுப்புதல், சோர்வுற்ற மக்களின் சோர்வு போக்குதல்: எழுச்சியூட்டுதல் எழுச்சி எழுச்சி எழுச்சி! அந்த நாளிலே தேசபக்தர் எல்லாருமே இந்த உத்தியைத்தான் கையாண்டனர். அதாவது, கதைமூலம் கருத்தைத் தெரிவித்தல். இந்திய சரித்திரத்திலே காணப்படும் எழுச்சிகளே எல்லாம் விவரிப்பார்கள். அதன்மூலம் மறைமுகமாகத் தங்கள் கருத்தை வலியுறுத்துவார்கள். கதைதான் மக்கள் மனத்திலே ஆழமாகப் பதியும். எனவே, கதை கூறுவதன்மூலம் கருத்தை வலியுறுத்துவார் கள். இதே உத்தியைத்தான் பாரதியும் கையாண்டிருக் கிரு.ர். ஆங்கிலம் கற்றவர்கள் பார்ம் என்றும் கண்டென்ட் என்றும் சொல்வார்கள்.