பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்முக நாடுகளுக்கு மிடையில் மோதல் நீடிக்கிறது. தொடர்கிறது.

இன்று உலக மயமாக்கல், உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலகச் சந்தை, உலக வர்த்தக அமைப்பு முதலியவை உருவாகி, அதில் உலகின் எல்லா நாடுகளும் சுதந்திரமாகப் பங்கு கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது. அதே சமயத்தில் அவைகளில் உலகின் வளர்ச்சியடைந்த பெரிய நாடுகளுக்கும் சிறிய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளும் மோதல்களும் நீடித்து வருகின்றன.

உலகில் சீனா ஒரு பெரிய நாடு என்னும் முறையில் அதன் அரசியல் செல்வாக்கும் பொருளாதார செல்வாக்கும் வர்த்தக செல்வாக்கும் உயர்ந்து வருகிறது.

சீனாவின் பொருளாதாரம் தனித்தன்மையோடு வளர்ச்சி பெற்றுக் கொண்டு வந்த போதிலும், உலகப் பொருளாதாரத்தோடும், உலகச் சந்தையோடும் இணைந்தும் தங்கள் நாட்டிலேயே தனிமையங்களை அமைத்துக் கொண்டு உலக அமைப்புகளோடு தொடர்பும் இணைப்பும் அமைத்துக் கொண்டிருக்கிறது. -

சோவியத் யூனியன் ஒரு சோஷலிஸ் குடியரசுகளின் கூட்டமைப்பு என்ற முறையில் உடைந்து விட்டது. அது கலைக்கப்பட்டு விட்டது. அதில் அங்கம் வகித்த நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சோஷலிஸ் நாடுகள் என்னும் நிலைமாறி தனித்தனியான சுயேட்சையான அரசியல் பொருளாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளாக அமைந்துசெயல்பட்டு வருகின்றன. ஆயினும் அந்த நாடுகளுக்கிடையில் பொருளாதாரக் கூட்டமைப்பும் இணைப்புகளும் தொடர்புகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

ரஷ்யா குடியரசு ஒரு பெரிய நாடு என்னும் வகையில் நிலப்பரப்பில் உலகின் முதலாவது நாடு என்னும் வகையில் ஒரு வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒன்றாக உலக அமைப்பில் சேர்ந்து தனது செயல்பாடுகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே தனக்கு இருந்த தொடர்புகளை நீடித்துக் கொண்டும் பலப்படுத்திக் கொண்டு உலக அரங்கில் முக்கிய இடம் பெற்று செயல்பட்டு வருகிறது. s

உலக அளவில் அமெரிக்கா, பிரிட்டன் ப்ோன்ற நாடுகள் அரசியல் பொருளாதார வர்த்தகத்துறைகளில் செல்வாக்குள்ள நாடுகளாக இருந்த போதிலும் அவைகளின் பழைய ஆதிக்கம் போய் விட்டது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜெர்மனியும், ஜப்பானும், போரில தோற்று ராணுவத்துறையில் பலவீனப்பட்டிருந்த போதிலும் பொருளாதாரம் வர்த்தகத் துறைகளில் வலுப்பெற்று இன்று உலகில் உலகப் பொருளாதாரத்தில் வலுவான நாடுகளாக இடம் பெற்று சுயேட்சையாக செயல்பட்டு வருகின்றன. a.

177