பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயற்சிப்பது முக்கியத்வம் பெறுகிறது. சிறுபான்மைக் கருத்து உலக நாடுகளுக்கிடையில் குறிப்பாக இரு மூகாம் நாடு களுக்கிடையில் பகை உணர்வை நீடிக்க வைக்கிறது.

2. வேறுபட்ட சமுதாய அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கிடையில் சமாதான சகவாழ்வுக் கொள்கை அனுசரிக்க வேண்டும் என்பது பெரும்பான்மைக்கருத்து அது சாத்தியமில்லை வேறுபட்டவர்க்கங்கள். இருக்கும்வரை வர்க்க முரண்பாடுகளும் வர்க்க மோதல்களும் நீடிக்கும் என்பது சிறுபான்மைக்கருத்து பெரும்பான்மை கருத்தின்படி ஒவ்வொரு நாட்டிலும் மக்களியக்கங்கள் அதன் இயல்பான வளர்ச்சிக்கு இடமளிக்க வேண்டும் என்பதும் உரண்டாவது கருத்தின்படி வர்க்க மோதல்களை தீவிரப்படுத்த வேண்டும் என்பதாகும்.

3. அணு ஆயுதங்களை போர்களில் எந்த நாடும் பயன்படுத்தக்கூடாது இந்தக் கருத்து நியாயமானது, சரியானது தான் என்றாலும் ஏகாதிபத்ய நாடுகளை நம்ப முடியாது. எனவே சீனவாஉம் அணு ஆயுதத்தயாரிப்பில் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பது மாற்றுக் கருத்தாகும்.

4. அடுத்தா நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது என்பது பொது நியாயம் என்றாலும் ஏகாதிபத்ய நாடுகளை நம்ப முடியாது

என்பது மாற்றுக்ருத்தாகும். ===

5. நாடுகளுக்கிடையில் ஏற்படும் தாவாக்களை பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்பதைப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் சீனா, இந்தியா மீதும் வியநாம் மீது எல்லைப்பிரச்சினைகளுக்காக போர் தொடுத்தது, படையெடுத்தது இராணுவத்தலை லீட்டில் ஈடுபட்டது.

6. சோஷலிஸ்ச் சந்தை முதலாளித்வச் சந்தை இரண்டுக்கு மிடையில் சமாதானமான போட்டியை வைத்துக் கொள்ளலாம் என்றாலும் சோவியத் யூனியனின் தொழில் வளர்ச்சியும் உற்பத்தி முறையும் மேற்கத்திய நாடுகளுக்கு இனையீடாக இருக்கிறது. ஆனால் சீனாவின் வளர்ச்சி நிலை அதோடு ஒத்துப் போவது கடினம். சீனாவின் வளர்ச்சி நிலை வளர்ச்சிபெறாத பழைய காலனி அறைக் காலனி நாடுகளுடைய வளர்ச்சிக்கு ஈடாக இருப்பதால், ஏற்றதாழ்வுகள் அதிகமாக உள்ளது. எனவே சீரான சோஷலிஸ்ப் பொருளாதாரம் என்பது சாத்தியமில்லை அது சோவியத் யூனியனுக்கு சாதகமாக இருக்கலாம் சீனாவுக்கு ஒத்துப் போகாது என்பது சீனக்கருத்தாகும்.

இந்தக் கருத்து வேறுபாடுகள் மோலழுந்த வாரியாகத் தென்பட்டாலும் ஆழ்ந்த விளைவுகளைக் கொண்டதாக இருந்தது.

சோவியத் யூனியன் கருத்துக்கள் நியாயமாகப் பட்டாலும், சீனாவலுவான நாடு, சக்திவாய்ந்த ராணுவம் பலத்தைக் கொண்ட நாடு, பெரிய நாடு, அதிகமான மக்கள் தொகையும் பெரிய சந்தையும் கொண்ட நாடு எனவே

229