பக்கம்:மதன கல்யாணி-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 169

பாலாம்பாளது கற்பைக் குறித்து வாய்கொண்ட மட்டும் புகழ்ந்து ஆனந்தக் கூத்தாட போலீஸ் கான்ஸ்டேபில்கள் இன்னொரு முறை முன்னிலும் அதிகமான பக்தியோடும் வலுவோடும் தங்களது பூட்ஸ் காலால் மைனரது துடையில் இடிக்க, சப் இன்ஸ் பெக்டர் பெரிதும் கோபங்கொண்டு, மைனரை நோக்கி, “ஒகோ! இதுவும் ஒரு சாமார்த்தியமோ இந்த வித்தையை எங்கே கற்றுக் கொண்டாய்? போ; நாயே! நிற்காதே; மறுபேச்சுப் பேசினால் இந்த இடத்திலேயே பலிபோட்டு விடுவேன்” என்று அதட்டிக் கூறிய வண்ணம், தமது நேர்த்தியான மெல்லிய பரம்பினால், மைனரது முதுகில் இரண்டு மூன்று பிரப்பம் பழங்கள் நிவேதனஞ் செய்ய, போலீஸ் ஜெவான்கள் அவனது கழுத்தைப் பின்னால் இருந்து தள்ளிக் கொண்டே பங்களாவின் வாசல் வரையில் வர, அதற்கு மேல் தமது கக்ஷ ஓங்காதென்று கண்ட மைனர், “ஓ லக்ஷமைனா!” என்று தலையில் கையை வைத்தக் கொண்டு ஆலந்துர் போலீஸ் ஸ்டேஷன் சிறைச்சாலைக்குப் போய்ச் சேர்ந்தான்.


10-ம் அதிகாரம் ஜெகப்புரட்டு மதனகோபாலனது விஷயத்தில் கல்யாணியம்மாளது மனத்தில் பொங்கி எழுந்த ஆவேச வெள்ளத்தை, அவளது புதல்வியரது வருகை அணை போட்டது போல, ஒரே நொடியில் சடக்கென்று தடுத்தது; அந்த யெளவனப் புருஷனை ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று மகா உக்கிரமாக அந்த சீமாட்டியின் மனதில் எழுந்து மிகவும் கடுமையாக வதைத்து அவளைத் துண்டிய அன்பும் ஆதரமும், வெட்கமாகவும் ஏமாற்றமாகவும் துக்கமாகவும் கோபமாகவும் பகைமையாகவும் மாறின. எனினும், அந்த ஒரு நிமிஷ நேரமும், அவளது மனம் பட்டடாடு சொல்லில் அடங்காததாக இருந்தது. மதனகோபாலனது விஷயத்தில் அவளது உள்ளத்தில் கொந்தளித்து எழுந்த கரைகடந்த பிரேமை யினால், சகிக்க இயலாத வெறி கொண்டு தன்னையும் உலகையும் மறந்து அவள் அவனிடம் சம்பாஷித்த போதும், அவனைக் கட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/187&oldid=649629" இலிருந்து மீள்விக்கப்பட்டது