பக்கம்:மதன கல்யாணி-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மதனகல்யாணி

இல்லையே. ஒருகால் வேறே யாரையாவது அம்மாள் துரப் பார்வையில் அவன் என்று தவறாக நினைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது” என்றான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் ஆத்திரம் அடைந்தவளாய் “விளக்கு பகல் போல எரிக்கும் இந்த இடத்தில் அப்படி ஆள் மாறாட்டமாக நினைக்க, என்னுடைய கண்கள் இன்னமும் அவ்வளவு தூரம் கெட்டுப்போக வில்லை. இன்று வீணை மண்ட பத்தில், இடைநடுவில், எனக்குத் தலை நோய் உண்டாயிற்று. அந்த அற்ப விஷயத்தை உங்களிடம் அப்போதே எதற்காகத் தெரிவிக்கிறது என்று நினைத்துக் கொண்டு எவரிடமும் சொல்லாமல் நான் எழுந்து வந்து கட்டிலில் படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டிருந்தேன். கால் நாழிகைக்கு முன் திடீரென்று கட்டிலண் டையில் மனிதருடைய காலடியோசை உண்டாயிற்று. நான் உடனே திடுக்கிட்டு விழித்துப் பார்க்கிறேன். மதனகோபாலன் கட்டிலைப் பிடித்துக் கொண்டு பக்கத்தில் வந்து நிற்கிறான்! என்னுடைய உடம்பு உடனே கிடுகிடென்று ஆடிப்போய் விட்டது. என் மனசில் பெருத்த திகில் உண்டாகிவிட்டது; மெதுவாக எழுந்து உட்கார்ந்து, அவனைப் பார்த்து முதலில் துரத்தில் நின்று பேசும்படி அதட்ட, அவன் கொஞ்சமே விலகி நின்றான். “என்னடா? எங்கே வந்தாய்?” என்று நான் உடனே கேட்க, அவன் இஞ்சிதின்ற குரங்கு போலப் பல்லைப் பல்லைக் காட்டிக் கொண்டு பைத்தியக்காரன் போல விழித்து இரண்டொரு நிமிஷம் ஊமையன் போல நின்று தத்தளித்தபின், “நீங்கள் நடுவில் எழுந்திருந்து வந்து விட்டபடியால், உங்களிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என்று இங்கே வந்தேன்” என்றான். அவனது முகக்குறிகளும், நடத்தையும், சொல்லும் எனக்குப் பெருத்த வியப்பையும் சந்தேகத்தையும் உண்டு பண்ணின ஆனாலும், விஷயத்தை நன்றாக அறிந்து கொள்ளாமல் ஆத்திரப்படக் கூடாது என்று நான் நினைத்து, “அதற்குத் தானே வந்தாய்? சரி, போய் விட்டுவா” என்றேன். அவன் புறப்பட்டுப் போகாமல் கட்டி லண்டை நெருங்கி வந்து என்னென்னவோ அசங்கியமான வார்த்தைகளைப் பிதற்றத் தொடங்கி விட்டான். அவன் அந்த விஷயத்தை எப்படி ஆரம்பித்தான் என்பது இப்போது சரியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/192&oldid=649635" இலிருந்து மீள்விக்கப்பட்டது