பக்கம்:மதன கல்யாணி-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 183

அது பெருத்த இடையூறாக முடியுமே என்று நினைத்து நினைத்து அவள் பெரிதும் கவலை கொண்டு அன்று இரவு நெடு நேரம் வரையில் மஞ்சத்தில் புரண்டு புரண்டு தவித்தவளாய், கடைசியில் ஒருவித முடிவிற்கு வந்தாள். மதனகோபாலன் பாடம் கற்பிக்கப் போகும் ஜெமீந்தார் வீடுகளில் உள்ள பெண்டீரில் சிலர் அவளுக்கு உறவினராயும், மற்றவர் நட்பினராயும் இருந்தமையால், அவன் அவர்களிடத்தில் உண்மையை வெளியிடுவதற்கு முன்னர், தான் ஒவ்வோர் இடத்திற்கும் சென்று, தனது பெண்களிடம் தான் சொன்ன கட்டுக்கதையை அவர்களிடமும் தந்திரமாக வெளிப்படுத்தி வைத்தால், பிறகு எவரும் அவனது சொல்லை நம்பமாட்டார்கள் என்றும், அவனை யாரும் தங்களது பங்களாக்களில் சேர்க்க மாட்டார்கள் என்றும் அவள் நினைத்ததன்றி, அத்தனை பங்களாக் களிலிருந்து கிடைக்கும் வருமானம் முற்றிலும் இல்லாமல் போமாயின், அவன் இந்த ஊரைவிட்டு வேறு ஊருக்குப் போய்விட நேருமாதலால், அதன் பிறகு அவனால் தனக்கு எவ்விதமான இடரும் நேராதென்று நினைத்து, அந்த நினைவின் படி காரியத்தை நிறைவேற்றிவிடத் தீர்மானித்துக் கொண்டவளாய்; மிகவும் பாடுபட்டு விடியற்காலை நான்கு மணிக்குத் துயிலில் ஆழ்ந்தவள், காலை ஏழு மணிக்குத் தனது பஞ்சனையை விட்டெழுந்தாள். எழுந்தவள் கட்டிலின் மேல், கால் பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த நிலைக்கண்ணாடியில், தனது வடிவம் தெரிந்ததைப் பார்க்க, தனது முகத்தில் பெருத்த மாறுபாடு தோன்றியிருக்கக் கண்டு, “இந்த ஒரு நாளைய கவலையில் முகம் ரத்தம் செத்து வெளுத்துப் போய்விட்டதே கண்கள் இப்படிக் குழிந்து போய்விட்டனவே! அடாடா! நமக்குப் புதிய புதிய கவலைகளும் துன்பங்களும் அல்லவா உண்டாகின்றன. முன்னமேயே இருக்கும் கவலைகளுக்கு இது வட்டியா சே! இந்தப் புதிய கவலையைச் சீக்கிரத்தில் ஒழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இது பெருத்த தீம்பாக வளர்ந்துவிடும். நகத்தால் கிள்ளி எறிவதை விட்டு, பிறகு கோடாரி கொண்டு பிளக்க நேரும்” என்று தனக்குள் எண்ணிக் கொண்டு எழுந்து பிறர் தன்னைப் பார்த்து சந்தேகம் கொள்ளாதிருக்கும்படி, அன்றைய காலைக்கடன் களையும் பகற் போஜனத்தையும் வழக்கப்படி முடித்துக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/201&oldid=649645" இலிருந்து மீள்விக்கப்பட்டது