பக்கம்:மதன கல்யாணி-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$84. மதன கல்யாணி

பிறகு சிறிது நேரம் படுத்திருந்து பிற்பகல் மூன்று மணிக்குத் தனது பெட்டி வண்டியைப் பூட்டச் செய்து, அதற்குள் உட்கார்ந்து கொண்டு மீனாகூஜியம்மாளது பங்களாவிற்கு வந்து சேர்ந்தாள்; சேர்ந்தவள் வண்டியை விட்டிறங்கி, மீனாகூஜியம்மாள் மேன் மாடத்தில் இருப்பதாக காவல்காரனிடம் கேட்டறிந்து கொண்டு படிகளின் வழியாக மேலே ஏறினாள்; அப்போது தனது முகத்தை ஒருவாறாக மாற்றிக் கொண்டாள். மிகவும் அசட்டுத்தனமான ஒரு சம்பவத்தை கண்டு அதிருப்தி அடைந்து புரளிசெய்பவரது முகம் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறு அவள் தனது முகத்தை வைத்துக் கொண்டு மேன்மாடத்திற்குள் சென்று மீனாகூஜியம் மாளும், கண்மணியம்மாளும் உட்கார்ந்திருந்த ஒரு விடுதிக்குள் நுழைந்தாள். அப்போது மீனாகூஜியம்மாள், தனது சாய்மான நாற்காலியில் சாய்ந்து துயிலில் ஆழ்ந்து விழித்தவளாய் உறங்கிக் கொண்டிருந்தாள். கண்மணியம்மாள் ஏதோ ஒரு புஸ்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு மூலையாகத் திரும்பி தனது முழு மனதையும் ஒரே நிலையில் நிறுத்தி வெறுவெளியை நோக்கிய வண்ணம் ஏதோ விசனத்தில் மூழ்கியிருப்பவள் போலவும், ஏக்கங் கொண்டவள் போலவும் அசைவற்று உட்கார்ந்திருந்தாள். தாங்கள் இருந்த விடுதிக்குள் யாரோ மனிதர் நுழைந்த ஒசையைக் கேட்ட மீனாகூஜியம்மாளும், கண்மணியும் திடுக்கிட்டு வாசற்படிப் பக்கம் நோக்கி, கல்யாணியம்மாள் வந்ததைக் கண்டனர். அவளது வருகை எதிர்பார்க்கப்படாததும், அருமையானதுமாக இருந்தமை யால், அவர்கள் இருவரும் வியப்புற்று தடயுடலாக எழுந்தனர். மீனாகூஜியம்மாள் நிரம்பவும் ஆசையோடும் மரியாதையோடும் எதிர்கொண்டு சென்று, “வரவேண்டும்; வரவேண்டும்; இப்படி சாய்மான நாற்காலியில் உட்காரவேண்டும்” என்று மிகுந்த அன்போடு உபசரித்து வரவேற்க, கல்யாணியம்மாள், பலவந்த மாகப் புன்னகை செய்த முகத்தினளாய், அருகிலிருந்த ஒரு சோபா வின் மீது உட்கார்ந்து கொள்ள, மீனாகூஜியம்மாளும் சிறிது துரத்தில் கிடந்த ஒரு சாதாரண நாற்காலியில் அமர்ந்தாள். கல்யாணி யம்மாளைக் கண்டு எழுந்த கண்மணியம்மாள் தனக்கு மாமியார் ஆகப்போகும் அந்த அம்மாளிடத்தில் நிரம்பவும் மரியாதை, பணிவு முதலியவற்றைக் காட்டுகிறவள் போல நாணிக்கோணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/202&oldid=649646" இலிருந்து மீள்விக்கப்பட்டது