பக்கம்:மதன கல்யாணி-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 185

அவளைப் பேணிப் பாராட்டுபவள் போல நடித்து, இங்கே இருந்த பொருளை அங்கே வைத்து அங்கே இருந்த பொருளை இங்கே வைத்து ஏதோ வேலை செய்பவள் போல அதிக சுறுசுறுப்பைக் காட்டி அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தாள். சோபாவில் உட்கார்ந்த கல்யாணியம்மாளும் நாற்காலியில் உட்கார்ந்த மீனாகூஜியம்மாளும் ஒருவரை ஒருவர் அன்பாக கூேடிமம் விசாரித்துக் கொண்ட பின்னர், மீனாகூஜியம்மாள், மாரமங்கலம் ஜெமீந்தாரிணியின் முகத்தை ஒருவாறாக உற்று நோக்கி, “என்ன உங்களுடைய முகம் ஒரு மாதிரியாக இருக்கிறதே! ஏதேனும் விசேஷமுண்டா?” என்றாள். மீனாகூஜியம்மாள் அந்தக் கேள்வி கேட்டதைக் குறித்து கல்யாணியம்மாள் அதிசயித்தவள் போல நடித்து, “விசேஷமா என் முகம் மாறுபட்டா தெரிகிறது? நான் இங்கே வரும் போது வண்டியில் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தனை செய்து கொண்டே வந்தேன். அதனால் ஒரு வேளை முகம் மாறுபட்டிருக்கலாம். நான் எந்த விஷயத்தை உங்களிடம் சொல்லக்கூடாதென்று நினைத்து வந்தேனோ அதே விஷயம் முன்னால் வந்து நிற்கிறது. நாம் மறைத்தாலும், நம்முடைய முகம் காட்டிக் கொடுத்து விடுகிறது. உங்களிடம் அதை ஏன் மறைக்க வேண்டும் என இப்போது தோன்றுகிறது” என்று கூறிய வண்ணம், வேடிக்கை போல நகைத்தாள். அதற்குள் கண்மணியம்மாள் ஒரு கட்டிலிற்கருகில் மெல்ல நழுவி, மறைவாக உட்கார்ந்து கொண்டாள். அவளது முகம் மாத்திரம் அப்பால் மறைந்திருந்தது. முதுகு முதலிய மற்ற பாகங்கள் யாவும் கல்யாணியம்மாளுக்குத் தெரிந்தது. மிகவும் அபூர்வமாக அன்று கல்யாணியம்மாள் வந்தது அவளது மனதில் பலவகையான யூகங்களுக்கு இடங்கொடுத்தது. முதல் நாள் தனது கலியான விஷயத்தைப் பற்றி தான் மதன கோபாலனிடம் சம்பாஷித்திருந்த விஷயமாக, மீனாகூரியம்மாளும், துரைராஜாவும் ஏதேனும் யோசனை செய்து, அதன்பொருட்டு கல்யாணியம் மாளை வருவித்திருப்பார்களோ என்றும், தனது கலியானத்தை அதிசீக்கிரத்தில் முடித்து விடும் விஷயமாக அவர்கள் பேசுவார்களோ என்றும் கண்மணி பெரிதும் கவலை கொண்டவளாய், அவர்களது சம்பாஷணையை நன்றாக உற்றுக் கேட்கலானாள். ஆனால், புஸ்தகம் வாசிப்பவள் போல அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/203&oldid=649647" இலிருந்து மீள்விக்கப்பட்டது