பக்கம்:மதன கல்யாணி-1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 மதன கல்யாணி

வேறே எவளாயிருந்தாலும், அந்தப் பத்திரத்தை வைத்துக் கொண்டு மைனரைத் தன் வசமாக்கிக் கொள்வாள்’ என்றாள்.

அதைக் கேட்ட சிவஞான முதலியாரது முகம் மிகுந்த கிலேசத்தைக் காட்டியது. மனம் தளர்வையும் ஏமாற்றத்தையும் அடைந்து விட்டது; அவள் மூலமாகப் பையனைத் தப்ப வைக்க லாம் என்று தாம் நம்பிவந்தது பயனற்றுப் போய்விட்டது என்றே நினைத்தவராய், அவர் கல்யாணியம்மாளது முகத்தை இடை யிடையில் இரண்டொரு முறை நோக்கினார். அவரது முகக் குறிப்பால், அவரது மன நிலைமையை ஒருவாறு யூகித்துக் கொண்ட கல்யாணியம்மாள், தான் தனது சாமர்த்தியத்தை சிறிதளவு உபயோகித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாய், “ஏனம்மா! மைனர் ஏதோ பத்திரம் எழுதிக் கொண்டு வந்து கொடுத்ததாகச் சொன்னாயே! அந்தப் பத்திரத்தை எங்கேயாகிலும் எறிந்து விட்டாயா? அல்லது, அது உன்னிடத்தில் இருக்கிறதா? அதைக் கொஞ்சம் பார்க்க வேண்டும் போல ஆசையாக இருக்கிறது எங்கே? அது இருந்தால், தயவு செய்து காட்ட முடியுமா?” என்று அன்பாகவும் நயமாகவும் கூற, அதைக் கேட்ட பாலாம்பாள் தனக்குள் ஒருவாறு மகிழ்ச்சி அடைந்தாள். ஏனெனில், அதுகாறும் கல்யாணியம்மாள் வாய்திறவாது அமர்த்த லாக உட்கார்ந்திருந்ததில் இருந்து, அவள் அகம்பாவமும் துஷ்டத் தனமும் துடுக்கும் நிறைந்தவளாக இருப்பாளோ என்று பாலாம்பாள் ஒருவாறு சந்தேகித்திருந்ததற்கு மாறாக, அவள் லலிதமான மனுவழியாய் இருந்ததைக் கண்டது அவளுக்குப் பெரிதும் திருப்திகரமாக இருந்தது. உடனே பாலாம்பாள் புன்னகை பூத்த வதனத்தோடு “அந்தப் பத்திரம், இந்தக் கட்டிலில் தான் எங்கேயோ கிடந்தது. இங்கே தான் இருக்க வேண்டும். இதோ எடுத்துக் கொடுக்கிறேன்; பாருங்கள்” என்று கூறிய வண்ணம் பின்புறம் திரும்பி, தலையணையைத் துக்கி, சால்வையைப் புரட்டி, அங்குமிங்கும் சிறிது நகர்ந்து தேடுகிறவள் போலப் பாசாங்கு செய்து, துப்பட்டியை சிறுகச்சிறுக மடக்கி, அதன் கீழ் மெத்தைக்குள் சொருகப்பட்டிருந்த பத்திரத்தை மெதுவாக இழுத்து மேலே வைத்துவிட்டு, மேலும் இரண்டொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/288&oldid=649810" இலிருந்து மீள்விக்கப்பட்டது