பக்கம்:மதன கல்யாணி-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 271

நிமிஷம் வரையில் தேடியபின், அதைக் எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, “இதோ இருக்கிறது; ஆனால் நீங்கள் இதைப் படித்தவுடனே என்னிடம் கொடுத்துவிட வேண்டும்; ஏனென் றால், என்னுடைய எஜமானர் கேட்டால், நான் காட்ட வேண்டி யிருக்கும்” என்றாள்.

கல்யாணியம்மாள் முன்னிலும் அதிகரித்த அன்போடு, “அப்படியே ஆகட்டும்; பார்த்தவுடனே கொடுத்து விடுகிறோம்” என்று மிகவும் உறுதியாகக் கூறிய வண்ணம் சடக்கென்று தனது ஆசனத்தை விட்டெழுந்து விரைவாகக் கட்டிலண்டை சென்று, பத்திரத்தை வாங்கி, சிவஞான முதலியாரிடம் கொடுத்து, அதை உரக்க வாசிக்கும்படி கூற, அவர் அதை வாங்கி அடியில் வருமாறு படிக்கலானார்:

சென்னை ஆலந்துருக்கு அருகில், மவுண்டுரோட்டில் உள்ள ஜெகன்மோகன விலாஸ் என்று பெயர் கொண்ட பங்களாவில் இருக்கும் மைசூர் பாலாம்பாள் அம்மாளுக்கு, சென்னை தேனாம் பேட்டையில் உள்ள மாரமங்கலம் மைனர் ஜெமீந்தாரான S S S S S C C C C C C C C C C C S S S C C C C C C C S S S C S C C C C C S C S S S துரையவர்கள் எழுதிக் கொடுத்த விவாக ஒப்பந்தப் பத்திரம்.

நான் என் மனப்பூர்வமாக உன்மேல் காதல் கொண்டு, என்னுடைய ஆயிசுகால பரியந்தம் உன்னையே என்னுடைய பாரியாளாக பாவிக்க, நான் என் மனதார விரும்புகிறேன். நமது ஜாதி வித்தியாசத்தைக் கருதி, நான் உன்னை அக்கினி சாட்சியாகப் பாணிக்கிரகணம் செய்துகொள்ளக் கூடாது இருந்தாலும், இந்த ஒப்பந்தத்தையே அப்படிப்பட்ட கலியாணம் நடந்ததற்கு சமானமாக ஒப்புக்கொள்ள இதன் மூலமாக நான் கட்டுப் படுகிறேன். நான் உன்னைத் தவிர, என் ஆயிசு காலத்தில், வேறே எவளையும் இனி அக்கினி சாட்சியாகக் கலியாணம் செய்து கொள்ளுகிறதில்லை. தவறி செய்து கொண்டாலும், நீயே முதல் மனைவியாகவும், உன் வயிற்றில் பிறக்கும் முதல் புத்திரனே சமஸ்தானத்துக்கு பிந்திய வார்சாகவும் ஆக, இதன் மூலமாய் உங்களுக்கு நான் உரிமை ஏற்படுத்தி இருக்கிறேன். உன்னை நான் பார்யாளாக ஏற்றுக் கொண்ட இந்த நாள் முதல் மாதம் ஒன்றுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/289&oldid=649812" இலிருந்து மீள்விக்கப்பட்டது