பக்கம்:மதன கல்யாணி-1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 மதன கல்யாணி

மானது என்று அவள் நினைத்து, உதவி செய்ய மறுத்து விடுவாளோ என்ற அச்சம் பிறந்து விட்டமையால், அவர்கள் அதற்கு எவ்வித சமாதானமும் சொல்ல முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் சிவஞான முதலியார் அவளைப் பார்த்து, “என்ன குழந்தாய்! பெரிய மனிதர்கள் என்று ஆதியில் இருந்தே நீ எங்களைப் புகழ்ந்ததென்ன? எங்களுடைய வார்த்தையில் உனக்கு இன்னம் நம்பிக்கை ஏற்படவில்லையா? சூரியன் திசை மாறிப் போனாலும், நாங்கள் சொன்ன வாக்குறுதியை மீற மாட்டோம்” என்று தளுக்காக மொழிந்தார்.

உடனே பாலாம்பாள் புன்னகை செய்து, “எத்தனையோ ஜனங்களுக்கு முன்னால், அக்கினி சாட்சியாகத் தாலி கட்டும் போது கூட, ஆகாயவாணியையும் பூமாதேவியையும் சாட்சி வைக்கிறார்களே! இப்போது நான் அதிகமாக ஒன்றையும் கேட்க வில்லை. மகா ஜனங்களுடைய சாட்சியும் எனக்கு வேண்டாம்: அக்கினியின் சாட்சியையும் நான் கேட்கவில்லை. ஆகாயவாணி யாகிய வக்கீல் ஐயாவும் பூமாதேவியான என்னுடைய மாமியாரும் சாட்சியாக இருப்பதே போதுமானது; அதிகமாக ஒன்றும் வேண்டாம்” என்று வேடிக்கையாக மொழிந்தாள்.

அதன் பிறகு கல்யாணியம்மாளும், சிவஞான முதலியாரும் திருடனுக்குத் தேள்கொட்டிய நிலைமையை அடைந்து, தங்களது மனதிற்கு நேர்விரோதமாக, அந்தப் பத்திரத்தின் அடியில் தங்களது கையெழுத்தைச் செய்து கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்ட பாலாம்பாள், எதிர்பாராமல் தனக்கு வந்து வாய்த்த அபாரமான அதிர்ஷ்டத்தையும் மகோன்னத பதவியையும் நினைத்துக் கரை கடந்த மகிழ்ச்சியடைந்து, பூரித்துப் புளகாங்கிதம் எய்தியவளாய், தனது ஆனந்தப் பெருக்கைத் தாங்க மாட்டதவளாய்த் தத்தளித்து, “சரி; இதுவரையில், எனக்கு நானே எஜமானியாக இருந்து வந்தேன். இது முதல் அந்த நிலைமை நீங்கிவிட்டது. இனிமேல் புருஷன், மாமியார் ஆகிய இருவருடைய சொல்லின்படி கீழ்ப்படிந்து நடக்க வேண்டியவள் ஆகிவிட்டேன். என்னுடைய கஷ்ட சுகங்களையும் இன்ப துன்பங்களையும் நீங்களே ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/302&oldid=649840" இலிருந்து மீள்விக்கப்பட்டது