பக்கம்:மதன கல்யாணி-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மதன கல்யாணி

அதற்குத் தேவையான தந்திர யுக்திகளை எல்லாம் சொல்லிக் கொடுத்து, அவனை அனுப்ப, அதன் பிறகு இருவரும் எழுந்தனர். அன்று மாலை ஏழுமணி முதல் ஒன்பதரை மணி வரையில் குலேபக்காவலி என்னும் நாடகம் வி.பி. ஹாலில் நடத்தப்படும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது ஆகையால், செட்டியாரிடம் போய் கடன் விஷயத்தை முடித்துக் கொண்டு நேராக அப்படியே வி.பி. ஹாலுக்கு தாங்களும் முன்னதாகவே போய்விட வேண்டும் என்னும் எண்ணத்தோடு அவர்கள் இருவரும் பங்களவைவிட்டு வெளிக் கிளம்பினர்.


2-ம் அதிகாரம் குலேபக்காவலி - மோகனாங்கி

அன்று மாலை 6 மணி சமயமாயிற்று; நாடகம் நடத்தப்படும் வி.பி. ஹாலில் ஜனங்கள் அபரிமிதமாகக் கூடியிருந்தனர். அதன் கூடம் முழுதும் கூக்குரலும் குதூகலமுமே காணப்பட்டன. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூன்று பெரும் பேய்கள் முற்றிலும் வெறிகொண்டு, கோபம், மோகம், லோபம், மதம், சண்டை, பொறாமை, நட்பு, துயரம், தரித்திரம் முதலிய பலவகைப்பட்ட துர்க்குணங்களான பிள்ளை குட்டி களோடு நிருத்தனம் செய்யும் நாடக மேடையாகிய வெளியுலகத் துக்கு முற்றிலும் மாறாக, அந்த நாடகக் கும்பலாகிய சிறிய உலகம் சந்தோஷமே நிறைந்ததாகத் தோன்றியது. மிகவும் விசாலமாக இருந்த அந்தக் கூட்டத்தில் எங்கும் விண்மணிகளைப் போல சரம் சரமாகத் தொங்கிய மின்சார விளக்குகளின் ஜோதி கோடி சூரியப் பிரகாசமாக ஜ்வலித்தது. சப்த வர்ணங்களை உடைய காகிதங் களால், அழகழகாகச் சித்தரிக்கப்பட்ட தோரணங்களும் பூக்களும் வானவிற்களின் அணிவகுப்போடு தேவேந்திர சபையோ, அல்லது கந்தருவ உலகத்தில் மன்மதனும் ரதியும் கொலுவிருக்க அமைக்கப்பட்ட அற்புத அலங்காரமோ எனத் தோன்றி, காண்போர் கண்களையும் மனத்தையும் கவர்ந்தன. ஆயிரக்

கணக்கில் வரிசை வரிசையாகப் பரப்பப்பட்டிருந்த வழுவழுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/32&oldid=649875" இலிருந்து மீள்விக்கப்பட்டது