பக்கம்:மதன கல்யாணி-1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 மதன கல்யாணி

சந்தேகத்திற்கு இடங்கொடாமல் ஒரே முறையாக அங்கே போகவும் தோதாக இருக்கும் என்று எண்ணியவளாய், கண்மணி யம்மாள் கடிதத்தை அவ்வாறே திருத்தி வைத்துக் கொண்டாள். அவளால் தபாற்சாலைக்கு அனுப்பப்பட்ட வேலைக்காரி, அரையனா உறை ஒன்று வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தாள். கண்மணியம்மாள் அதை வாங்கி மேல் விலாசத்தை எழுதி, அதற்குள் கடிதத்தைப் புகுத்தி ஒட்டி அவளிடம் கொடுத்து, பங்களாவின் வாசலில் இருந்த தபாற்பெட்டியில் போட்டு விட்டு வரும்படி கொடுத்தனுப்பினாள். அந்த வேலைக்காரி எழுத்து வாசனை அறியாதவள் ஆதலால், யாருக்கு எழுதப்பட்டது என்பதை அவள் அறிந்து கொள்ள முடியாதென்று கண்மணி யம்மாள் உறுதியாக நம்பி, அவளால் எவ்விதமான துன்பமும் நேராதென்று நினைத்து, அந்தத் தினத்தின் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தவளாய் விசனக்கடலில் ஆழ்ந்து தனக்குத் தானே மனமாழ்கிக் கிடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/329&oldid=649893" இலிருந்து மீள்விக்கப்பட்டது