பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

107

டெஸ்ட் பண்ணிப் பார்த்தாங்க. எஜமான் ரத்தம், கண்ணம்மாவுக்குப் பொருத்தமாப் போயி டுச்சு. அவரு கொடுத்த ரத்ததானத்தினாலே தான் நம்ம கண்ணம்மா இப்போ கண்ணைத் திறந்து சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கா’’ என்று பொன்னிக் கூறிக் கொண்டு வரும்போதே ஆறு முகம் முகத்தில் அறைந்து கொண்டு ஐயோ நீங்க எவ்வளவு பெரிய உதவி பண்ணி என் மகளைக் காப்பாத்தியிருக்கீங்க. இந்தப் பாவி உங்க முகத்திலே எப்படி விழிப்பேன். நான் உங்களுக்கு நெனச்ச துரோகத்துக்கு, காறித் துப்பி, காலாலே என்னை எட்டி உதைச்சாத்தான் என் மனசு சமாதானம் ஆகும்.’’ என்று ஏதோ வாய்க்கு வந்தபடி புலம்பிக் கொண்டிருந்தான்.

11

“எந்தக் கொடிய பாபக் கேட்டையும் விட மதுவே அதிகமான வீடுகளையும் பாழாக்கி, அதிகமானவரின் வாழ்வைச்சிதைத்தும் கொடுரம் புரிந்துள்ளது:

- கிப்பன்ஸ் பாதிரியார்

அன்று பொங்கல் திருநாள். அந்த கிராமமே மிராசுதார் பலவேசம் பிள்ளையின் விஸ்தாரமான பண்ணை வீட்டின் முன்னே கூடியிருந்தது.