பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

109

துடைத்தார். அவனை நேரே அழைத்துச் சென்று காந்திஜியின் படத்திற்கு முன்கொண்டு போய் நிறுத்தி வணங்கச் சொன்னார்.

  • புகழுக்கும், வீண்பெருமைக்கும் ஆசைப் பட்டு, யாரும், எந்தக் காரியமும் செய்யக்கூடாது. என்னை நீ இப்படிப் புகழும்படியா, நான் எந்தக் காரியமும் செய்யல்லே. சமூகத்திலே உள்ள ஒவ் வொரு மனுஷனும்; பிறருக்குத் துயரம் ஏற்படும போது பரஸ்பரம் செய்யற உதவியைத்தான் நான் குழந்தை கண்ணம்மாவுக்குச் செஞ்சிருக்கேன்.

இதிலே புகழ்ச்சிக்கே இடமில்லே. பகைமை உணர்வு பாராட்டாமே, ஒவ்வொருத்தரும் சகோ தர பாசத்துடன் வாழனும்னுதான் காந்திஜி ஆசைப்பட்டார். o

யார் என்ன தீங்கு செய்தாலும் அதற்காக நம் மனதில் பழிவாங்கற எண்ணம் எழக்கூடாதுன்னு தான் காந்திஜி சொல்லியிருக்கார். அதை எல் லோரும் மனதிலே வைத்திருங்கள் என்றார் .பல வேசம் அமைதியாக,

உடனே ஆறுமுகம் நா-கூட வேணும்னு மனசறிஞ்சு அப்படி ஒரு தப்பும் செய்ய நினைக் கல்லே. அந்தப் பாழாப்போன குடிதாங்க எங்க புத்தியைக் கெட்ட வழியிலே திருப்பிட்டுது..??

ஆறுமுகத்தின் வார்த்தையைக் கேட்டு பலவேசம் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.