பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78

துக்காக, பயந்து மட்டம் போட்டானா, என்று ஆறுமுகம் அடிக்கொருதரம் புலம்பிக்கொண்டி ருந்தான். ---

'சே.,சே..! அப்படியெல்லாம் ராமன் உன் விஷயத்திலே நடந்துக்க மாட்டான் அண்ணே எப்படியும் வந்துடுவான்’ என்று சமாதானப் படுத்தினான் பக்கிரி. -

ஒருவேளை, பெண் சாதி புடிச்சு நிறுத்தி வெச்சுப் பிட்டாளோ...' என்று சந்தேகத்தைக் கிளப்பினான் குப்பன்.

‘என்னமோ தெரியலியே... என்று எல்லோ ரும் பேசிக் கொண்டிருக்கும்போதே, ராமன் ஒரு பை நிறைய பாட்டிலுடன்-தோட்டத்திற்குள் வந்து நின்றான்.

அவனைக் கண்டதும் ஆறுமுகம் சந்தோஷ மிகுதியால், கட்டி அணைத்தபடி, வா...வா? என்று வரவேற்றான். பை நிறைய அவன் கொண்டு வந்திருக்கும் சரக்கைப் பார்த்த பிறகு தான், சோர்ந்துகிடந்த ஆறுமுகத்திற்கு உற்சாகம் பிறந்தது.

‘ஏண்டா ராமர்; இம்மான் நேரம்?’ என்று வாஞ்சையுடன் கேட்ட ஆறுமுகத்தினிடம், உன் னாலே நான் ரொம்ப ரோதனைபட்டுப் போனேன். அண்ணே, என்றான் மிகவும் சலித்துக் கொண்டபடி. F