பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83

‘என்னைக் குடிக்காதேன்னு சொல்ல நீ" யாரடா; உனக்கு என்னா ரைட்டு இருக்குன்னு கேக்கறேன்? என் ராமன் வாங்கிக் குடுத்தான். நான் குடிப்பேன்; கொட்டுவேன்; உடைப்பேன்; பேசினா உதைப்பேன்.” - ■

நோன் தாண்ணே ராமன்’’

ஆறுமுகம் கபால்னு, துண்டோடு சேர்த்து ராமனின் கழுத்தை ஒற்றைக் கையால் இறுக்கப் பிடித்துக் கொண்டான்? வலக்கையில் பாட்டில் தளும்பிக் கொண்டிருந்தது.

டேய். நீயா ராமன்? எங்கேடா உன் கையிலே வில்லு இருக்குது? பக்கத்திலே சீதை யில்லே. லட்சுமணர் இல்லே. குடிபோதையிலே இருக்கேன்னு நினைச்சு ஏமாத்திறியா! உன்னை யாருன்னு எனக்குத் தெரியும்.’’

கழுத்தின் இறுக்கம் தாளாமல் ராமன் தவித் தான். 'நான் ராமன் தான் அண்ணே; நல்லாப் பாரு.”

‘ஏண்டா! என்னைப் .ெ ப ா ட் ைட ய ன் னு நினைச்சிட்டியா; என் ராமனை எனக்குத் தெரி யாது. நீ ராமன் இல்லே; ராவணன். என் குடியைக் கெடுக்க வந்த பலவேசம். இப்ப வசமா நீ எங்கிட்டே மாட்டிக்கிட்டே. அன்னிக்குப் போலெ தலையாணியைக் காட்டி ஏமாத்த முடி யாது . உன்னையும் அந்தச் சிறுக்கியையும் GTIm)}'