பக்கம்:மீனோட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை ரொம்ப காளாக்க நண்ப, வெகு நாட்களுக்குப் பின்பு சந்திக்கிறோம். இந்த நீண்ட இடைவேளைக்குக் காரணம்?-வேண் டாம், இது முன்னுரை: முறையீடு அல்ல. இந்த சந்தோஷ சமயத்தில் விரலுக்கிடுக்கில் வழிந்து போனதற்கெல்லாம் கணக்கு ஏன்? 1940/41 வாக்கில் மீனோட்டத்திலிருந்து 1978இல் ஐயா வரை நம்மிடையே நான்கு தலைமுறை காலம்-நினைத்துப்பார்க்கையில் ஏதோ பயம், கூடவே மகிழ்ச்சி உணர்கிறேன். மீன்கள் நதிகளில் ஒடுகின்றன. நதிகள் கடலுக்கு ஒடுகின்றன. கடல்கள்-பூமியில் நிலபாகத்தைச் சூழ்ந்த நீரின் ஒரே மயம்தானே! யுகக்கணக்கில் இதுவரை ஒடிய மீன்கள் எத்தனையோ? பறவைகளுக்கு, சிறு மீன் பெருமீனுக்கு, தூண்டிலுக்கு, வலைக்கு. மனிதனுக்குஇரையாகியும், இயற்கையாகவும் மாண்டவை எத்தனையோ? கற்பனைக்கு அடங்கா. எண்ணுவதே வெட்டி வேலை, விடு. அவைகள் ஒடிய ஜூலம் நதிகளிலும் கடல் களிலும் எவ்வளவோ புரண்டு மாறியாச்சு. ஆனால் மீன்கள் இன்னமும் ஓடிக் கொண்டு. தானிருக்கின்றன. ஜலம், நதியிலும் கடலிலும் பாய்ந்து கொண்டு தானிருக்கிறது. ஓயாத இந்த உயிரோட்டத்துக்கு சமீப கால மாய் நம்முரண்கள் யாவுக்கும் ஒரே சமாதானமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/5&oldid=870399" இலிருந்து மீள்விக்கப்பட்டது